பேஸ்புக்கில் போராடிக் கொண்டு இருக்கும்
சக கருத்துப் போராளிகளில் ஒருவரா நீங்கள்.?
ஆம் எனில் இதை படியுங்க.!
பொது விவகாரங்களைக் குறித்தும் ,
அதனோடு சம்பந்தப்பட்ட நபர்களைக் குறித்தும்,
அனல் பறக்க கருத்து சொல்ல,
பேஸ்புக் மூலம் கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தும் போது,
நம்மில் பலர் கொஞ்சம் ரொம்பத்தான்
அப்பாடக்கராக மாறி விடுகிறோம்.
(விதிவிலக்காய் சிலரும் உண்டு. )
கருத்து சொல்கிறேன் என்கிற பெயரில்,
நம்முடைய அனுபவ அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டு,
வேறு எதுவும் இல்லை என நாம் நினைத்தால்
அது நம்முடைய அறியாமையே அன்றி வேறில்லை.(என்பது என் பணிவான கருத்து )
நம் பதிவுக்கு எதிராக
மாற்றுக் கருத்து சொல்லும் அனைவரையும் உடனடியாக
எதிரிகள் பட்டியலில் சேர்த்து விடுகிறோமா.?
உண்மையே நம்முடைய மனதில் சமூக அக்கறை உள்ளதா.?
அல்லது
நமது கதாகாலட்சேபங்களை நாம் சுய விளம்பரம் செய்கிறோமா.?
அதுதான் நமது முக்கிய இலக்காக உள்ளதா.?
நம்மை நாம் பரிசோதனை செய்து கொள்வோம்.
கொஞ்சம் நாம் யோசிக்கணும்.!
ஆரம்பத்தில் சக மனிதன் மீது உள்ள பரிவின் காரணமாக;
சமூக அவலங்கள் மீது ஏற்படும் கோபம் காரணமாக
எழுத ஆரம்பிக்கும்
நம்மில் பலரின் இதயங்கள்,
காலப்போக்கில்
விளம்பர வியாதிக்கு அடிமையாகி விடும்
ஆபத்தை எதிர் கொள்ள நேர்கிறது.
நம்மை;
நாம் சொல்லும் கருத்தை;
பிரதானப்படுத்த
நாம் எப்போது அதீத முயற்சி கொண்டு செயல்பட முற்படுகிறோமோ
அன்று நம் சமூக அக்கறையின் மீது
முதல் சாவு மணி விழ ஆரம்பிக்கிறது.
நாம் சுய புராணங்களுக்கு,
நம்மை குறித்து சொல்லப்படும் புகழ் மொழிகளுக்கு கிடைக்கும்
லைக்குகளும் சேர்களும் நம்மை புளகாங்கிதம் அடைய செய்யும் போது
நம் சமூக அக்கறையின் மீது இரண்டாம் சாவு மணி விழ ஆரம்பிக்கிறது.
மற்றவர் குறித்த விவாகரங்களை,
நாம் நினைத்தபடி எழுதும் போது நமக்கு ஏறபடும் ஆர்வ மிகுதி ,
நம்மைக் குறித்து எவராகிலும் விமர்சனம் செய்யும் போது எரிச்சலாய் மாறுகிறது எனில்
நம் சமூக அக்கறையின் மீது மூன்றாம் சாவு மணி விழ ஆரம்பிக்கிறது.
என்ன சார்.!
நம்ம இவை அனைத்தையும் கடந்து,
இவற்றின் எந்த வலையிலும் சிக்காமல்
இன்னும் உயிர் துடிப்போடு தான் இருக்கிறதா
நம் சமூக அக்கறை.?
ஆம் எனில் நல்லது.
அப்படியே தொடர்வோம்.!
எதோ தோன்றியது சொன்னேன்.
அவ்வளவே.!
நமது கசடுகளை அகற்றி,
நம் மனதும், முயற்சியும் தூய்மைப்பட்டால்
எல்லோருக்கும் நல்லது தானே!
-
Abbas Al Azadi