அரசுகள் தயாரித்த ஆய்வறிக்கைகளை படித்தால் “தரமிகு கல்வி, தரமிகு போதனை முறைகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது, ஏழைகளும் தர மான கல்வியைப் பெற வாய்ப்பு களை ஏற் படுத்துவது, அதாவது இந்திய பெண் ணும், தாழ்த்தப்பட்ட அட்டவணை சாதி யினரும், ஆதிவாசியினரும், சிறுபான்மை யினரும் தேடுகல்வியைப் பெற சம வாய்ப் புகளை உருவாக்குவது, இன்னும் கூர் மையாக சொல்வதென்றால் தேச மொத்த வருவாயில் 6 சதவீதம் கல்விக்கென ஒதுக்கி, கூரை இல்லா பள்ளி, கழிப்பிட வசதி இல்லாத பள்ளி, பாடத்திற்கேற்ற ஆசிரியர்கள் இல்லாத பள்ளி என்ற நிலையை மாற்றுவதில் தொடங்குவது, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரத்தை பின்பற்றுவது, ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம், தேவைக் கேற்ற எண்ணிக்கையில் ஆசிரியர்களை திட்டமிட்டு உருவாக்க தேவையான வசதிகளைக் கொண்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிலையங்கள், பயிற்றுவிக்கும் முறைகளை மேம்படுத்த ஆய்வு மையங் கள், தேவைப்பட்டால் பிற நாடுகளின் அனுபவங்களை பெற ஆசிரியர்களை அனுப்புவது, இவைகளோடு தரமிகு கல்வியை இணைப்பதே சமச்சீர் கல்வி எனப்படுகிறது” போன்ற எண்ணற்ற விபரங்களைக் காண முடியும்.