அனைத்து மனித உரிமை அமைப்புகளின் மீதும் புழுதி வாரி தூற்றியுள்ள கேரள உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணனுக்கும், தொட்டதற்கெல்லாம் தீவிரவாதம் என்ற சொற்பிரயோகத்தின் பின்னணியில் தம்மைத் தம் அயோக்கியத்தனங்களை மறைந்து கொள்ளும் உண்மையான எதிரிகளுக்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசரும் பிரபல மனித உரிமை போராளியுமான வி.ஆர். கிருஷ்ணய்யர்(http://en.wikipedia.org/wiki/V._R._Krishna_Iyer), உண்மையான தீவிரவாதிகள் யார்? என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறார்.

ஏற்கெனவே இந்நாட்டில், மாவோயிஸ்டுகளையும் நக்ஸலைட்டுகளையும் சந்தேகிக்கின்றோம். முதலாளித்துவ நாடுகள் மார்க்சிஸவாதிகளைச் சந்தேகிக்கின்றனர். மார்க்சிஸ்டுகளைச் சந்தேகிப்பது சரி என்பதா? சரியல்ல! இப்படி சந்தேகிக்க ஆரம்பித்தால், பொதுவாக எல்லா கட்சி, அமைப்புகளையும் சந்தேகிக்க வேண்டிய நிலைக்கு இட்டுச் செல்லும்.
மனித உரிமை அமைப்புகளை ஒருபோதும் சந்தேகப்படக்கூடாது என்பது தான் என் கருத்து. அவ்வாறெனில் என்னையும் சந்தேகப்பட வேண்டும். காரணம், நானும் மனித உரிமைகளுக்காகப் பேசுகிறேன். கடவுளே! உச்ச நீதிமன்றத்தைச் சந்தேகிக்க வேண்டும். காரணம், மனித உரிமைகளுக்காக மிக அதிகம் செயல்படுவது உச்ச நீதிமன்றமாகும்.
மனித உரிமைகள் மீறும் அரசாங்கத்தைக் கட்டுப்பாட்டில் நிறுத்துவது உச்ச நீதிமன்றம் தான். அவ்வாறிருக்கும் போது உச்ச நீதிமன்றம் ஒரு மனித உரிமை அமைப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அரசியலமைப்புச் சட்டத்தையே சந்தேகிக்க வேண்டும்! ஏனெனில், மனித உரிமைகளின் அடிப்படையே அரசியலமைப்புச் சட்டமல்லவா? அரசியலமைப்புச் சட்டத்தைச் சந்தேகப்பட்டால், நீதிமன்றங்களைச் சந்தேகிக்க வேண்டும். அமைச்சர்களையும் சந்தேகப்பட வேண்டும். ஆகவே, இப்படி மொத்தமாக மனித உரிமை அமைப்புகளைக் குறித்து கூறுவது சரியல்ல.
தீவிரவாதம், தீவிரவாதம் என்று கூறுகிறார்களல்லவா! மனிதன் எப்படி தீவிரவாதியாகிறான்? எதுவுமே செய்யாமல் ஹாயாக ஒரு மனிதர் பால், பாயசம் சாப்பிட்டுச் சுகம் அனுபவித்துக் கொண்டிருக்க, மற்றொரு மனிதர் பசி, பட்டினியில் வாடுகின்றார். அந்நேரம் உணவு கிடைக்காமல் துன்பப்படும் அவன், ஹாயாக உட்கார்ந்து சுகம் அனுபவித்துக் கொண்டிருப்பவனின் கண்ணில் தீவிரவாதியாகிறான். இது சரியல்ல!
இந்நாட்டில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டவர்களிலிருந்து தான் தீவிரவாதிகளும் நக்ஸலைட்டுகளும் மாவோயிஸ்டுகளும் உருவாகின்றனர். மனித உரிமைகள் மறுக்கப்படுவதன் மூலம் இவர்கள் உருவாக்கப்படுகின்றனர். இந்நாட்டில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் குசேலர்கள் தான் தீவிரவாதிகளாகவும் நக்ஸலைட்டுகளாகவும் மாறுகின்றனர். இது துப்பாக்கியின் மூலமாகவோ அரசின் கட்டுப்பாடுகளின் மூலமாகவோ நிற்கப்போவதில்லை! மீண்டும் மீண்டும் தீவிரவாதி என்ற சொற்பிரயோகம் கொண்டு பிரசங்கங்கள் நடத்துவது மூலம் எதுவும் நடக்கப்போவதில்லை!
உண்மையில் தேவையானது நீதி நடப்பாக்குதலாகும். மனித உரிமை என்று கூறினால், மனிதனுக்கு வாழ்வதற்கான உரிமை என்று அர்த்தம். அதாவது, கவுரவமாக வாழ்வதற்கான உரிமை! கவுரவமாக வாழவேண்டுமெனில், முதலில் உணவு கிடைக்கவேண்டும். நல்ல நிலையில் சுவாசிப்பதற்கான காற்று கூட இந்நாட்டில் இல்லை. காற்று அசுத்தமாகி கிடக்கிறது. தண்ணீர் அசுத்தமடைந்து கிடக்கிறது. உணவு அசுத்தமடைந்துள்ளது. இந்நாட்டில் கிடைக்கும் அநேக அத்தியாவசிய பொருட்கள் அசுத்தமானவைகளே!
இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களை அசுத்தமடையச் செய்யும் நபர்களைத் தான் நாம் பயப்படவேண்டும்; கவனமாக கண்காணிக்க வேண்டும்! அதல்லாமல், எல்லோரும் தீவிரவாதிகள், கவனமாக இருக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும் என்றெல்லாம் கூறுவது சரியல்ல! முக்கியமாக மார்க்சிஸ்ட் கட்சியிலுள்ள ஒரு தலைவர் அவ்வாறு கூறக்கூடாது!
இயேசு தேவன் கூறியது, "பக்கத்து வீட்டுக்காரனை நேசியுங்கள்" என்று கூறினாரென்றால், "பக்கத்து வீட்டுக்காரனைப் பயப்பட வேண்டும்; கவனமாக இருக்க வேண்டும்; தீவிரவாதியாக இருக்கலாம்" என்று அரசியல் தலைவர்கள் இப்போது (மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரும் கேரள உள்துறை அமைச்சருமான கோடியேரி பாலகிருஷ்ணன்) கூறுகின்றனர். இதொன்றும் சரியல்ல!
ஆசிரியரின் கையை வெட்டியது போன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடக்கக் கூடாததாகும். அச்சம்பவத்தில் அரசை விடவும் அமைச்சர்களை விடவும் கடுமையாக நான் அதனை எதிர்த்திருந்தேன். நம்நாட்டில் பண்பாடு மிருகத்தனமாகும் விதத்தில் செத்துப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் நம் நாட்டின் அரசியலாகும். அதனால் தான், மார்க்சிஸ அரசியலைக் காங்கிரஸ்காரர்கள் எதிர்க்கின்றனர். காங்கிரஸ் அரசியலை மார்க்சிஸ்டுகள் எதிர்க்கின்றனர். இந்த இரண்டு அரசியலையும் பாஜகவினர் எதிர்க்கின்றனர். இந்நாட்டிற்குத் துரோகம் அத்தனையும் இழைப்பது அரசியலாகும்(இதனை உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன் ஏற்றுக்கொள்வாரா?).
இந்த ஆசிரியரின் கையை வெட்டியச் சம்பவத்திற்கான காரணத்தைஉண்மையாக விசாரித்தால், அதன் பின்னணியில் அரசியல் தான் காரணமாக அமைந்துள்ளதைக் கண்டுகொள்ளலாம். ஆனால், தீவிரவாதத்தின் பெயரில் அம்மனிதர் கையும் காலும் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் கிடக்கின்றார். எப்படியாவது அவரைக் காப்பாற்ற வேண்டும் என மருத்துவமனைக்கு அழைத்துக் கூறினேன்.
ஜமாஅத்தே இஸ்லாமி தீவிரவாதம் எனில் முஸ்லிம் லீக்கும் தீவிரவாதம் தான். ஜவஹர்லால் நேரு லீகை ஒருமுறை செத்துப்போன குதிரை என்று அழைத்தார். முஸ்லிம் லீக் தீவிரவாதம் என்று பலரும் கூறுவர். முஸ்லிம் லீக், ஹிந்துத்துவ அமைப்புகளைப் பற்றி தீவிரவாதிகள் என்று கூறும்.
ஜமாஅத்தே இஸ்லாமி தலைமை வகிக்கும் எஃப்.டி.சி.ஐ, நான் அங்கத்துவம் வகிக்கும் அமைப்பாகும். நான் அறிந்தவரை எஃப்.டி.சி.ஐ மக்களிடையே இணக்கமும் பரஸ்பர அன்னியோன்னியமும் உண்டாக்கவே முயற்சி செய்கிறது. மதங்களுக்கு இடையில் பகைமைக்குப் பதிலாக, சகிப்புத்தன்மையும் இணக்கத்தையும் உண்டாக்கவே முயல்கின்றது. ஆகையால் அது போன்ற அமைப்புகள் இந்நாட்டிற்குத் தேவையாதே. அது ஆரோக்கியமாக மக்களிடையே செயல்படும் அமைப்பாகும்.
வெறுமனே குற்றம் சுமத்தி ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது அல்ல நமக்குத் தேவை. தீவிரவாத குற்றச்சாட்டுகள் கொண்டு ஒரு நன்மையும் ஆகப்போவதில்லை. அதற்கு மாறாக, நான் கூறவருவது எஃப்.டி.சி.ஐயுடனும் மற்ற அமைப்புகளுடனும் நல்லமுறையிலான அணுகுமுறை வேண்டும் என்பதே! இது போன்ற சொற்பிரயோகமல்ல நமக்குத் தேவை! நல்லது நடப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதே நமக்குத் தேவை!
விலையேற்றத்தை உருவாக்குபவர்களே தீவிரவாதிகள்! மக்களின் இரத்தத்தை உறிந்துக் குடிக்கும் விதத்தில் விலை ஏறுகிறது. அதனைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை. விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த எதனால் அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை? ஆங்கிலேயர்கள் கூட, முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் காலகட்டங்களில் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். (அவ்வளவு எமர்ஜென்சியான காலக்கட்டத்திலேயே விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் எனில், வளர்ச்சியடைந்த இக்காலக்கட்டத்தில் அதற்கு இந்த அரசாங்கங்களால் ஏன் முடியவில்லை?). இவர்களோ, விலையேற்றத்துக்கு எதிராக அசைந்து கொடுக்கமாட்டேன்கிறார்கள். 2000 ரூபாய்க்கான மருந்து 20000 ரூபாய்க்கு விற்கும் போது, நம் அமைச்சர்கள் தீவிரவாதம், தீவிரவாதம் என்று கூறித் தப்பமுயற்சிக்கின்றனர். அதொன்றும் வெற்றிபெறப்போவதில்லை! மக்கள் இக்கபட நாடகத்தைக் கண்டுகொள்வர். இது போன்ற சொற்களைக் கவனமாக பிரயோகிக்கவேண்டும்!
கட்சி அரசியல் தான் இந்நாட்டின் சாபக்கேடு! கட்சி அரசியல் கொண்டு எல்லோரையும் தீவிரவாதிகளாக்குகின்றனர். மக்கள் இப்போது அதிருப்தியில் உள்ளனர். எது பேசினாலும் எதைப் பார்த்தாலும் அதில் அரசியலைக் கொண்டு வருகின்றனர். தண்ணீர் இல்லை என்று கூறினால், அது அரசியலாகும். கோக்கோ கோலா அரசியலானது. குளமும் மணலும் எல்லாமே அரசியலால் அசுத்தமாகி விட்டது. உணவுக்காக எலுமிச்சையோ தேனீர் பொடியோ கூட வாங்கமுடியவில்லை. எல்லாமே அசுத்தமாகியிருக்கின்றது. ஆரோக்கியமான வகையில் எல்லோரையும் ஒன்றிணைத்துக் கொண்டு சில பொது வேலைகள் செய்ய வேண்டியதுண்டு. என்றால் மட்டுமே வாழ்வதற்கான உரிமை யதார்த்தமாகும்!
(நன்றி: முஹ்ஸின் பராரி, ப்ரபோதனம் - 7.8.2010)