பலமுள்ளவன் தவறு செய்யும் போது பொது சமூகம் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது.. பாதிக்கப் பட்டவன் கூக்குரல் இடும் போதும் , அந்த பொது சமூகம் அதன் வேலையைப் பார்த்துக் கொண்டு, எதுவும் செய்யாமல் அமைதியாகவே இருக்கிறது.
பலமுள்ளவன் பொது சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் போது.., அடிபட்டவன் - பலவீனமாக இருந்தவன் திருப்பி செய்யும் எதிர் வினையின் போது.., பொது சமூகம் அந்த பாதிப்பின் வலியைப் பொறுக்க முடியாமல், தன் அமைதியை தொலைத்து, கதறிக் கதறி அழுகிறது..
நாம் வாய் மூடி மௌனியாக இருக்கும், பொது சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டாம்.
மதம்,இனம்,மொழி, என எல்லா வித மாச்சரியங்களுக்கும் அப்பாற்பட்டு, மனித சமூகத்திற்கு எதிராக , தீங்கு செய்யும் எவராக இருந்தாலும், அந்த அநீதியைத் தடுப்போம்.
எனக்கு பாதகம் இல்லாத வரையில், எது நடந்தால் எனக்கு என்ன என்கிற ரீதியிலான, நம் வெற்று மௌனத்தைக் கலைப்போம். மனித குலம் காப்போம்.