"NO CASTE IN ISLAM."
இஸ்லாத்தில் சாதி இல்லையா .??
இந்திய அரசியலமைப்பு சட்டம் லஞ்சம், ஊழல், திருட்டு போன்றவற்றை ஆதரிக்கிறதா.?
இல்லை..
அப்படியெனில்,
இந்தியாவில் உள்ள மக்கள் மேற்கண்ட தவறுகளை செய்கிறார்களே.?
மக்கள் செய்யும் தவறை , மக்களுடைய குற்றமாக, அறியாமையாகத்தான் கருத முடியுமே தவிர, அரசியலமைப்பின் தவறாக கருத முடியாது..
இந்தியர்களில் சிலர் தவறு செய்கிறார்கள்.
ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டம் மேற்கண்ட எந்த தவறையும் ஆதரிப்பதில்லை..
மேலும் தனக்கென ஒரு அரசியல் சட்டத்தை கொண்டிருப்பதோடு, தவறு செய்யும் மக்களுக்கு
அவரவருக்குரிய உரிய தண்டனைகளையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது..
இங்கே பிரச்சனை , தவறு செய்யும் மக்கள் மீதும், சட்டத்தை சரியாக பயன்படுத்தாத ஆட்சியாளர்கள் மீதும் தானே தவிர அரசியல் சட்டத்தின் மீதான அடிப்படை பிரச்சனை அல்ல இது.
என்ற விளக்கத்தை பாமரர் கூட எளிதாக புரிந்து கொள்வார்..
இஸ்லாத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாத முஸ்லிம்களில் சிலர், அவர்களது அறியாமையினால் மக்களிடையே பாகுபாடு பார்ப்பது உண்டு.
இப்போது மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் , இஸ்லாமியரிடையே சாதி இல்லையா .?? என்ற கேள்விக்கு வருவோம்.

இஸ்லாம் ஒரு போதும் சாதியையோ,
அதற்கான கூறுகளையோ போதிப்பதில்லை.
முஸ்லிம்களில் சிலர் தவறு செய்கிறார்கள் என்றால், அது அந்த தனிப்பட்ட நபர்களின் தவறு தானே தவிர,
அந்த தவற்றை இஸ்லாத்தின் கொள்கை மீதான தவறாக கொள்ள இயலாது..
அப்போது தவறு செய்யும் முஸ்லிகளை இறைவன் ஏன் உடனடியாக தண்டிக்கவில்லை.?
இஸ்லாத்தின் கொள்கையின் அடிப்படையில்,
இந்த உலகம் ஒரு சோதனைக்களம்.
இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான வசதி வாய்ப்புகள், சூழ் நிலைகள், சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதனது முழு வாழ்வும் தேர்வுக்களமே.
தேர்வு எழுதும் வேளையில் எவருடைய மதிப்பெண்ணையும் நாம் கணக்கிட முடியாது என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே.
அதைப்போலவே ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது மரணம் வரை, கால அவகாசம் உண்டு.
ஒரு மனிதன் , அவனது வாழ்வின் செய்த ஒட்டுமொத்த நற்செயல்கள், தீய செயல்கள், உதவிகள், உபத்திரவங்கள் போன்ற அவனுடைய அனைத்து செயல்களின் அடிப்படையிலேயே அவனுக்கான கூலியை கொடுக்க முடியும்.. அவனது மொத்த மதிப்பெண்ணை கணக்கிட இயலும். மேலும் சில செயல்களை வெறும் செயல்களை வைத்து மட்டும் அல்லாது, அவனது எண்ணத்தையும் வைத்தே மதிப்பிட இயலும்.
இறுதியாக சொல்வது,
கொள்கை அடிப்படையில் விமரிக்கும் போது,
முஸ்லிம்களாக இருப்பவர்கள் செய்யும் தவறுகளையும், அறியாமைகளையும், இஸ்லாத்தின் கொள்கை மீதான தவறாக பிரச்சாரம் செய்வது அறிஞர்களாக இருக்கும், (அல்லது கருதிக் கொள்ளும்) மக்களின் அறியாமையா.? அல்லது காழ்ப்புணர்வா .?