சமூக சேவை என்பது நோயாளிகளுக்கு உதவி செய்வதும், சாக்கடையை சுத்தம் செய்வதும், இரத்த தானம் செய்வதும், வண்டியில் லிப்ட் கொடுப்பதும், மட்டும் அல்ல..
சமூகத்திற்கு எவையெல்லாம் தேவையோ அவற்றை நம்மால் இயன்ற அளவுக்கு மக்களுக்கு பெற்றுத்தர முயற்சிப்பதும்; பெற்றுக் கொடுப்பதும்; அந்த தேவைகள் மக்களை அடைவதில் தடைகள் இருப்பின் அவற்றை அகற்றுவதும் கூட சமூக சேவைகளே.!
சமூக சேவையின் பரப்பு பரந்து விரிந்தது. சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், மறுமலர்ச்சிக்கும், ஆக்கப்பூர்வமான மாற்றத்திற்கும் எவையெல்லாம் தேவை என ஆராய்ந்து அதை செயல்படுத்தும் வழிவகைகளை காணுவது கூட சமூக சேவையின் ஒரு அம்சமே.
நமது சமூக சேவையானது மக்களிடத்தில் புகழையும், பாராட்டுதலையும் பெறுவதை இலக்காக கொண்டு அமையாமலிருப்பது சிறந்தது.