வலிமையான ஒருவன், சும்மா உட்கார்ந்து இருக்கும் மனிதன் ஒருவனை வழிய சென்று மிதிக்கிறான்.
பாதிக்கப் பட்டவன் வலியால் கத்துவதையும் , எதிர் வினை ஆற்றுவதையும் தீவிரவாதம் என்பதாக செய்தியை பரவலாக்குகிறான்.

சமூகத்தில் இருக்கும் நாம் இரண்டையும் வேடிக்கை பார்க்கிறோம். பாதிப்பு நம்மை வந்து சேரும்போது முழு சுயநலத்தின் அடிப்படையில், குய்யோ முறையோ என்று கத்துகிறோம்.

நல்லவனின் வாழ்வுரிமைக்காக முடிந்த வரை ஆதரவு அளிப்போம். தீமை புரிபவனை முடிந்தவரை எதிர்ப்போம்.
நாடு செழிக்கட்டும். நீதி, நியாயம் , அமைதி தழைக்கட்டும்.

நீதி நியாயத்தின் அடிப்படையில், முடிந்தவரை நன்மைக்காக குரல் கொடுப்போம்; தீமையின் கரம் தடுப்போம்.
Powered by Blogger.