தான் மிக மிகச் சரியாக இருக்கிறோம் என்ற எண்ணம் சமூகத்தையும், சக மனிதர்களையும் இழிவாக மற்றும் இகழ்ச்சியாக கருதும் மனநிலையை நமக்கு உருவாக்குமானால், 
அது ஒன்றே போதும். நாம் மிகப்பெரும் அறிவிலிகளாகவே இருக்கிறோம் என்பதற்கான சான்றாக.!

சாதரணமான மன நிலையில்,
தன் வீட்டுக்கு அருகில் வாழும் குற்றவாளி ஒருவரை
இகழ்ச்சியாக கருதும் ஒருவர்,
தனது தனிப்பட்ட பொறுப்பு, கடமை போன்றவற்றை உணர்ந்த பின்,
தன் அண்டை வீட்டில் வாழும், அந்த குற்றவாளியின் குற்றத்தை குறைக்க நாம் என்ன செய்தோம் என்பதைக் குறித்தே பிரதானமாக கவலை கொள்வார்.

வெறும் ஆசைகளும், கனவுகளும் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தி விடாது.
நாடு இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று வெறுமனே கவலைப்பட்டு, குறைகளை பேசிக்கொண்டு இருக்கும் ஒருவனை விட, தன்னால் முடிந்த ஆக்கப்பூர்வமான பணிகளை செய்பவனும், மாற்றத்திற்கான வழிவகைகளை கண்டு அதை செயல்படுத்த முயற்சிப்பவனும், மாற்று யோசனைகளை பரவலாக்குபவனுமே சிறந்தவர்கள்.


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.?
Powered by Blogger.