குறையுடைய ஒரு பொருளை நாம் அடையும் போது, 
ஐயோ எனக்கு கிடைத்த பொருளில் மட்டும் குறையா என நமக்கு நினைக்க தோன்றும்..!

அந்த பொருள் நமக்கான சோதனைப் பொருளாகவும் இருக்கலாம்.
அல்லது அந்த பொருளுக்குரிய அடைக்கல இடமாக நாம் ஆக்கப்பட்டும் இருக்கலாம். 

என் வீட்டு ரோஜாவில் ஏன் பூ சரியாக பூப்பது இல்லை என கவலைப்படும் அதே தருணத்தில், நோயுற்ற ஒரு பூச்செடியை பராமரிக்கிற சூழ்நிலையை அடைந்து இருக்கிற நாம், அதை நம்மால் இயன்ற வரை சிறந்ததாக பராமரிக்க முயற்சி செய்யலாம்.

எனக்கு கிடைத்தது வெறும் முள் செடியா என கவலைப்படுவதன் மூலம் வருத்தம் தான் அதிகமாகும்.

இருப்பினும் ஒன்றே ஒன்று சொல்ல தோன்றும் நமக்கு. !
இறைவா.!
என்னால் தாங்க இயலாத பாரத்தை என் மேல் சுமத்தாதே.!
Powered by Blogger.