அமைதியை விரும்புவது என்றால் என்ன பொருள்.?

பல பேஸ்புக் அமைதி விரும்பிகளை போல ,
நாட்டில் எது நடந்தாலும் அமைதியாகவும் , அடக்கமாகவும் இருப்பதா.??
அதன் பெயர் அமைதியை விரும்புவதல்ல.!
அது அக்கறை எதுவும் அற்ற சுயநலத் தன்மை. 

மாற்றத்திற்கான எந்த ஒரு செயலையும் தான் செய்ய விரும்பாமல், மற்றவர்கள் நமக்கான கனவு உலகத்தை உருவாக்கி தர வேண்டும் என ஆசைப்படுவது நற்குணம் அல்ல.
அமைதியை விரும்புவது என்பது, பிறரால் தனக்கும், தன் வாழ்க்கைக்கும் பலன் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அல்ல.

நம்முடைய செயல்பாடுகள், சொல், செயல் சிந்தனை மூலம், நாம் விரும்பும் அமைதியான சூழ்நிலையை நமக்கும், நம்மை சுற்றி வாழ்வோர் அனைவர்க்கும் கிடைக்க முயற்சி செய்வதே அந்த வார்த்தையின் பொருள்.
வெறும் கையாலாகாத வெற்று மவுனத்தொடு , வாய் மூடி அமைதியை இருப்பதன் பெயர் 'முழு சுயநலத்தனம்.' ..

ரவுத்திரம் பழகு என்று தான் பாரதி கூட சொல்கிறார்.
அநீதி கண்டும் கோபம் வராதவன் அமைதி விரும்பி அல்ல.
ஒன்று கோழை, அல்லது அக்கறை அற்றவன், அல்லது பலவீனமானவன்.

போராட்ட குணம் இல்லாதவனால், ஒரு போதும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.
Powered by Blogger.