வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்னு 
எப்படி சார் நம்பரிங்க.? என வடிவேலு ஸ்டைலில் 
நம்மிடம் கேட்டால் ஹி ஹி என நாம் சிரிப்போம்.. //
எல்லா விஷமும் விஷம் தான்..
விஷத்தின் கடுமை மட்டுமே சற்றே கூடும் அல்லது குறையும். ஆனால் 
கடைக்காரன் கொடுத்தாலும், கவர்ன்மென்ட் கொடுத்தாலும், கட்சிக்காரன் கொடுத்தாலும், கலவரக்காரன் கொடுத்தாலும் அதன் அடிப்படைத் தன்மை மாறப்போவதில்லை.

வெள்ளை கலர், சிவப்பு, காவி, பச்சை, மஞ்சள், ஊதா , என எந்த கலரில் விஷம் இருந்தாலும் விஷம் விஷம் தான்..

வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்னு
எப்படி சார் நம்பரிங்க.? என வடிவேலு ஸ்டைலில்
நம்மிடம் கேட்டால் ஹி ஹி என நாம் சிரிப்போம்..
ஆனால் பல நேரங்களில்
நம் செயல்கள், நம்பிக்கைகள், ஆதரவுகள் அல்லது கனத்த மவுனம் காமடி பீசாகவே உள்ளது. !

கசாபின் , அபினவ் பாரத்தின் , ராணாவின், தாவூதின் , மோடியின், அசிமானந்தாவின் , சாத்வி பிரக்யாவின், கர்னல் ப்ரோஹித்தின் , மற்றும் கர்கறேவை கொன்றவர்களின்
செயல்பாடுகளில் உங்கள் வசதிக்கேற்ப உங்களால் நியாயத்தை காண முடியும் என்றால், உங்கள் விஷத்தை நீங்கள் மகிழ்வோடு சாப்பிடுங்கள்
ஆனால் , அதை மற்றவர்களுக்கு நல்ல உணவு என்பதாக சிபாரிசு செய்யாதிர்கள் ப்ளீஸ். !

மறுபடியும் சொல்றேன்.. நம்பினால் நம்புங்க.!
எல்லா விஷமும் விஷம் தான்.. அது எந்த கலரில் இருந்தாலும்..!

தன்னால் இயன்ற சிறு துரும்பைக்கூட அசைக்க முயலாமல்,
கனத்தை மவுனத்தொடு கொடுமைகளை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பவனும் ஒரு வகையில் குற்றவாளியே.!

அவனவன் பதவி என்ற பெயரில் ஊழல் செய்து திளைத்துக் கொண்டு இருக்கும் வேளையில்
தன் வேலை , கடமை என்பதையும் தாண்டி , ஒவ்வொரு தீவிரவாத தாக்குதல்கள், கலவரங்கள், வன்முறைகளின் போதும்,
அமைதியை ஏற்படுத்த வேண்டி செய்யும் முயற்சிகளில் தன் இன்னுயிரையும் இழக்கும் ஒவ்வொரு ராணுவ வீரர்களும் , காவல் துறை அதிகாரிகளும் இந்த நாளில்(இந்த நாளிலும்) நினைவு கூறப்பட வேண்டியவர்கள்.!
Powered by Blogger.