புதிதாக ஒரு விவகாரம் வந்தால் பழைய விவகாரத்தை அப்படியே மறந்து விடுவது நம் அனைவரின் பலவீனங்களில் ஒன்று.
ஆட்சியாளர்களும், நமது இப்படிப்பட்ட பலவீனங்களை பயன்படுத்திக் கொள்பவர்களும் நம்மை குறித்து நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். எனவே தான் புதிதுபுதிதாக விவகாரத்தை உருவாக்கி நம்மை பழைய விவகாரங்களில் இருந்து நம் கவனத்தை திறமையாக திசை திருப்பி விடுகிறார்கள்.

அனைத்து விவகாரங்களில் பெரும்பாலும் அடிப்படை ஒன்றுதானே.
தேவை நமக்கு சற்றே அகண்ட பார்வை.

நடப்பு செய்தியை வெறும் நேரப் போக்கிற்காக விவாதிக்கும் மக்களாக நாம் இருந்து விடக்கூடாது. நம்மிடம் உள்ள அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றை வெளிப்படுத்தி அதன் மூலம் வெறும் புகழையும், பாராட்டையும் பெறுவதை நம் முக்கிய நோக்கமாக கொண்டு நம் முயற்சிகள் அமைந்து விடக்கூடாது.
எல்லா விவகாரங்களை குறித்தும் ஒரே நேரத்தில் எவரால் பேச முடியாது.
அதற்கான வேலை வரும் போது தான் சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து அதிகம் பேசவும், விவாதிக்கவும் முடியும்.

நாம் எதற்காக பல்வேறு விசயங்களைக் குறித்தும், விவகாரங்களைக் குறித்தும் பேசுகிறோம், விவாதிக்கிறோம் என்கிற அடிப்படை இலக்கு குறித்து நாம் தெளிவாக இருந்தால், செய்தி மாற மாற நம் விவாதங்களும் முற்றிலும் மாறும் சூழல் வராது. அது இலக்கை நோக்கி அது கம்பீரமாக நடைபோடும்.
Powered by Blogger.