சுயநலவாதி...
உண்மையில் யார் சுயநலவாதி?
யார் பொதுநலவாதி.?
யார் சமூக அக்கறை கொண்டவர்...?

தனக்கு மட்டுமே எல்லாம் என்கிறது மட்டும் சுயநலவாதி அல்ல.
தன்னை சுற்றியுள்ள,
தன் குடும்பத்திற்கு மட்டும் என்கிற நிலை,
தன்னுடைய மொழி பேசுபவர்களுக்கு மட்டும்...,
தன்னுடன் பணி புரிபவர்களுக்காக மட்டும்...,
தன்னுடைய மாநிலத்திற்காக மட்டும்...,
தன்னுடைய இனத்திற்காக மட்டும்....,
தன்னுடைய ஜாதிக்காக மட்டும்....,
தன்னுடைய மதத்திற்காக மட்டும்...,
என்று நீண்டு கொண்டே செல்லும் இந்த பாதையை தான் "சுயநலம்" என கருதுகிறேன்...

வெளியூருக்கு சென்று நம்ம ஊரு நபர் ஒருவரை பார்த்தால் அவர் நம்ம ஆள்.
 

வெளி மாநிலத்திற்கு சென்று நம்ம மாநிலத்து நபர் ஒருவரை பார்த்தால் அவர் நம்ம ஆள்.

வெளி நாட்டிற்கு சென்று நம்ம நாட்டு நபர் ஒருவரை பார்த்தால் அவர் நம்ம ஆள்.

வேறு கிரகத்துக்கு சென்று ஒரு மனிதனை அங்கு பார்த்தால் அவர் நமக்கு மனிதனாக மட்டும் தான் தெரிகிறார்...

பாருங்கள்...நம்முடைய இந்த பார்வையை...

மனிதன் என்பதற்காக குரல் கொடுக்க வேண்டும்..
மனிதத்திற்காக குரல் எழுப்ப வேண்டும்...

இந்த பண்பையே பொதுநலம், பொதுநலவாதி என நான் கருதுகிறேன்...


//Courtesy : AbuShamsheer//
Powered by Blogger.