BY சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
கடந்த ரெண்டு மூன்று நாட்களாய் இணையத்தில் மட்டும் சில ஆட்கள், ஏதோ தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை கழுத்தை நெரித்து கொல்ல முயல்கிறார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தார்களே.. அப்படி என்ன படம் என்று பார்க்க போனேன். அதுவும் இது தமிழனின் வரலாறு என்றும் இதை பார்க்காவிட்டால் தமிழனே இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று என்று பயப்படும் அளவிற்கு இவர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருந்ததினால் தியேட்டரில் சென்று பார்க்க முடிவு செய்து போனேன்.
தமிழர்களின் வரலாறு என்று சொல்லப்படுகிறது. கி.பி. 300ல் சிம்பிளான கதை. ஆயர்குடி எனும் இடத்தில் வாழும் நான்கு ஆண்கள், நான்கு பெண்களை, அங்கு வந்து சேரும் ஆட்கள் அவர்களை துரத்தி விடுகிறார்கள். வந்தவர்கள் மொத்தம் பத்து பேர். ஒரு மாட்டு வண்டி, ஒரு பெரிய களன். இவர்கள் வந்து சேருவதோ முல்லைக் கொடி எனும் இடத்திற்கு. ஆனால் அந்த இடமோ ஒரு பாலை வனம். அவர்களால் எப்படி வாழ முடியும். எனவே தாங்கள் வாழ்ந்த இடத்தை மீட்க போரில் தந்திரமாய் சூது செய்து ஜெயிக்கிறார்கள். எப்படி என்பதை கிடைத்த தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்கள்.
டிஜிட்டல் கேமரா எனும் கருவியின் பயன் சினிமாவை எளிமையாக்ககூடியது என்று சந்தோஷப்பட்டது வீணாகவில்லை. ஆனால் அந்த டெக்னாலஜி இன்னொரு பக்கம் எவ்வளவு தூரம் நம்மை பாதிக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் வரலாறு பற்றி சொல்ல வேண்டியதுதான். ஆனால் அதை இவ்வளவு அமெச்சூர் தனமாய் சொல்லியதை பார்க்கும் போது வரலாறு சொல்லப்படாமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. என்னதான் தமிழர், தமிழுணர்வு என்று ஜல்லியடித்தாலும், சுவாரஸ்யமாய் சொன்னாலே அன்றி எந்த உணர்வும் எழும்பாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். படம் நெடுக அமெச்சூர் தனமான நடிப்பு. ஒன்று எல்லோரும் ஒன்றாய் பேசுகிறார்கள். இல்லையேல் பத்து நிமிஷத்திற்கு ஒரு முறை பேசுகிறார்கள். திடீரென மதுரை, தஞ்சாவூர், பழந்தமிழ், சிங்கள தமிழ் சிலாங், புலிகள் பற்றி பேசுவது. திடீரென மறவன், அது இது என்று பேசுவது. சிங்கம் வேறு நாட்டிலிருந்து வந்த மிருகமாம். புலிதான் தமிழன் மிருகமாம். என்னவோ சொல்கிறார்கள். எல்லா பெண்களும் முலை மறைத்து கச்சை கட்டிக் கொண்டோ, கலர் கலரான புடவைகளை அணிந்து கொண்டோ வருகிறார்கள். கி.பி. 300ல் இவ்வளவு கலர் ஆடைகள் வடிவமைத்திருந்தார்களா? அதிலும் பெரும்பாலும் எல்லோரும் வெள்ளை வெளேர் என்று சலவை செய்த வேட்டியை அணிந்திருக்கின்றார்கள். அப்படியே இருந்தாலும் வந்தேறிகளால் துரத்தியடிக்கப்பட்ட அவர்களின் நிலை எப்படியிருக்கும் ஒரு அகதியின் நிலையல்லவா? அதற்கான டீடெயில்ங் எங்கே?.

கழுத்தை சுற்றி துண்டு போட்டிருந்தால் தலைவர். மற்றவர்கள் எல்லோரும் ஊர் மக்கள். அதாவது இருக்கும் எட்டு பேரில் தலைவர் அவர் பொண்டாட்டியும் அடக்கம். அதே போல் வில்லன் கோஷ்டி என்றால் தலையில் இலை க்ரீடம் அணிந்திருப்பார். தோளில் துண்டு போட்டிருப்பார். வந்தேறி கும்பல் தமிழ் ஒரு மாதிரி பேசுகிறார்கள். நம்ம ஊர் சேட்டு போல வந்தேறிகள் என்று இவர்கள் சொல்வது வடநாட்டு ஆட்களையா? தெருவோர நாடகங்களில் கத்தியால் குத்துவது போல் காட்சியிருந்தால் பாவனையாய் குத்துவார்கள் அது போல ஒரு போர் காட்சியே காட்டுகிறார்கள். படத்தில் காமெடி காட்சி இல்லாததற்கு சரியாகிறது.
நடிப்பென்று பார்த்தால் நமக்கு அவ்வளவு இருட்டிலும் முகம் தெரிந்தது காயாம்பூவாக நடித்த ஷம்மு மட்டுமே. பெரிதாய் நடிப்பதற்கு ஏதுமில்லை. ஒரு காட்சியில் ஒரு மூக்குத்தி போட்டிருக்கிறார். இன்னொரு காட்சியில் ரெண்டு. க்ளைமாக்ஸ் கைகலப்பின் போது முகத்தில் தீடீரென கலர் கலராய் வர்ணம் தீட்டி கொண்டிருக்கிறார். இவர் மட்டுமல்ல மற்றவர்களும் இருக்கிற பரபரப்பில் எப்படி கலர் பூசிக் கொள்ள டைம் கிடைத்தது என்று தெரியவில்லை. தமிழர் பண்பாட்டில் கைகலப்பில் முகத்தில் கலர் பூசிக் கொண்டார்கள் என்பது இருக்கிறதோ என்னவோ.

சாதாரண திரைப்படம் எடுப்பதற்கே சுவாரஸ்யமாய் கதை சொல்ல வேண்டியிருக்கும் இந்த கால கட்டத்தில் இம்மாதிரியான கதைகளை ஏனோதானோ வென்று சின்ன பட்ஜெட்டில் படமெடுக்கிறேன் என்று எடுத்து அதை கெடுப்பதை விட எடுக்காமல் இருப்பதே மேல். இதை பாராட்டியதாய் சொல்லும் கலைஞர்கள் மேல் நிஜமாகவே ஒரு சந்தேகம் வருகிறது. ஒரு வேளை இப்படத்தை பாராட்டவில்லையெறால் தமிழின துரோகி என்று சொல்லி விடுவார்களோ? என்ற அச்சத்தில் சொல்லிவிட்டார்களா? ஒரு சினிமாவை எப்படி எடுப்பது என்பதை நன்கு தெரிந்த தங்கர்பச்சான், பாலு மகேந்திரா போன்றவர்கள் இதை பாராட்டியதாய் சொல்லி விட்டிருக்கும் அறிக்கை அவர்களின் படைப்புகளை தாழ்த்திக் கொள்வதற்கு சமம். அமெச்சூர் தனமான நடிப்பு, ஆங்காங்கே வி.புலிகளையும், தமிழுணர்வாளர்களையும் தூண்டி விடும் வசனங்கள். இம்மாதிரியான வசனங்கள் கி.பி.300ல் பேசியிருப்பார்களா? என்று எந்த வரலாற்றில் சொல்லியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
தமிழர்களின் கதை சொல்லும் வரலாறு பற்றி தெரிந்திருந்தால் இக்கதையை சுவாரஸ்யமாய் சொல்ல முயன்றிருக்கலாம். வெறும் ஆராய்ச்சி ஒரு சினிமாவாகி விடாது என்பதை நிருபிக்க இந்தப் படம் போதும். இப்படம் வெளியாகாமல் பெரிய நிறுவனங்கள் தடுப்பதாய் தனி வீடியோவில் தங்களுக்கு என்று சொந்த கேமரா, யூனிட், எடிட் சூட், ஆபீஸ், எதுவுமே கிடையாது என்று அழுது செண்டிமெண்டாய் பேசிய இயக்குனருக்கு தெரியாதா? ஏவி.எம் போன்ற நிறுவனங்களே கேமரா, யூனிட் போன்றவைகளை வாடகைக்குத்தான் எடுக்கின்றது என்று. அது மட்டுமில்லாமல் இவை ஏதும் இல்லாமல் தமிழரின் வரலாற்றை சொல்லும் கதையை எடுப்பது என்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா? சரியாக சொல்லப்படாத எந்தக் கதையும் எடுபடாது என்பது இப்படத்தின் மூலம் மீண்டும் நிருபணம் ஆகியிருக்கிறது. இப்படத்தை தியேட்டரில் தூக்கி விட்டார்கள் என்று புலம்பினார்கள். நிச்சயம் தூக்கத்தான் செய்வார்கள் ஏனென்றால் சாந்தி தியேட்டரில் ஆங்காங்கே இருட்டு மூலையில் முலை தடவ வரும் ஜோடிகள் நான்கு, படம் ஆரம்பித்ததும் சீட்டிற்கு நடுவே தூங்கிய இரண்டு பேர், பின்பு ஆங்காங்கே தூங்கியபடியும், தெரியாமல் வந்துவிட்டோமே என்று புலம்பியவர்கள் என்று எல்லாரையும் சேர்த்து சுமார் முப்பது பேர் இருந்திருப்பார்கள். சின்ன பட்ஜெட் படங்களூக்கு தியேட்டர்கள் ஏன் கிடைப்பதில்லை. இந்த படத்தை ஏன் தியேட்டரிலிருந்து தூக்கினார்கள் என்பது போன்ற பல விஷயங்கள் தமிழர்களுக்கு தேவையாயிருக்குமென்கிற பட்சத்தில் அதைப் பற்றிய விரிவான கட்டுரை எழுதுகிறேன்.
இவ்வளவுக்கும் மீறி இதில் பாராட்ட வேண்டிய அம்சம் என்னவென்றால் நாலு முள் புதரை காடாக காட்டக் கூடிய ப்ரேம்களை வைத்த கேமராமேனுக்கும், எடுத்ததை கிடைத்ததை வைத்து ஜம்பும், கையுமாய் எடிட்டிட்ட எடிட்டரையும், எதையாவது சொல்ல வேண்டும் என்று வித்யாசமாய் ஆசைப்பட்ட இயக்குனரின் முயற்சியையும் தான்.
பாலை - செண்டிமெண்ட் படத்தில் இருந்தால் ஓடும். படம் ஓட செண்டிமெண்ட் உதவாது.
டிஸ்கி: என்னடா இவன் இப்படி எழுதியிருக்கிறானே? நீயெல்லாம் சினிமாக்காரனா? நீ படம் எடுத்து கிழித்துவிடுவாயா? ஒரு தமிழனுக்கு தமிழனே ஆதரவு தரவில்லையென்றால் எப்படி? என்றெல்லாம் பேசுகிறவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் காசு கொடுத்து படம் பார்த்துவிட்டு பட்டதை எழுத எனக்கிருக்கும் உரிமையை தயவு செய்து யாரும் கேள்வி கேட்காதீர்கள். அதை மீறி விமர்சிப்பவர்கள் இப்படத்தின் தியேட்டருக்கு போய் டிக்கெட் வாங்கி படம் பார்த்துவிட்டு, அப்புறம் தமிழுணர்வோடு பேசுங்கள். வாழ்க தமிழ்.. வாழ்க தமிழ் சினிமா தமிழுணர்வு. வெங்காயம் போன்ற டெக்னிக்கலாகவும், மேக்கிங்கிலும் குறையாய் இருந்தாலும் நல்ல கருத்தை சரியான சொன்னதற்கு பாராட்டியவன் நான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ்.. தமிழ் சினிமா.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்