Showing posts with label Article. Show all posts

What you think about 
'Living together before Marriage'.??

Will It has to be considered as Freedom of choice.?

திருமணத்திற்கு முன் கணவன் மனைவி போல வாழ்வது, திருமணம் செய்யாமல் கணவன் மனைவி போல வாழ்வது போன்றவை ,கேடு கேட்ட ஒரு சமூக சூழ்நிலை
யை உருவாக்கும் என்பதே என் கருத்து.

1)Those who live together before marriage are the least likely to marry each other.

2)Those who live together before marriage have higher separation and divorce rates.

3)Those who live together before marriage have unhappier marriages.




பொறாமைத் தீ(யது) அணைப்போம்....இறைவனை என்றும் நினைப்போம் 


- “தென்றல்“ கமால் -;

அவர் என் நண்பர். வெளிநாட்டிலுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மாதம் நாற்பதாயிரம் சம்பளம் பெறுபவர். மனைவி மகள் என்று சிறிய குடும்பம். நிறைவான வாழ்வு.
அவர் ஒரு நாள் என்னிடம் அங்கலாய்த்துக் கொண்டார். 'இறைவனிடம் கேட்டு என்னங்க கிடைக்குது? இறைவனை நம்பாதவாகளுக்கும்;இ தகுதி இல்லாதவர்களுக்கும்இ கெட்டவர்களுக்கும்தான் மேலும்மேலும் சம்பள  உயர்வும் இ செல்வ செழிப்பும் அவர்கள்; விரும்புவதும் கிடைக்கிறது' என்றார்.
 


இளமையைக் கொண்டாடும் இஸ்லாம் - Syed Sulthan

உங்கள் குழந்தைகள் 
உங்களுடைய குழந்தைகள் அல்லர்.
அவர்களைப் போல் ஆக 
நீங்கள் முயலலாம். ஆனால்,
அவர்களை உங்களைப் போன்று 
ஆக்க முயலாதீர்.
ஏனெனில், வாழ்க்கை முன்னோக்கியே 
செல்கிறது, பின்னோக்கி அல்ல.
- கலீல் ஜிப்ரான்

இளமைக் காலம் மனித வாழ்வின் வசந்த காலமாகும். பூக்களும் பூமணமும் பூந்தேனும் நிறைந்த காலம். பிறரை ஈர்க்க விரும்புகின்ற பருவம். பிறரால் ஈர்க்கப்பட விரும்புகின்ற பருவம். கனவுகள் நிறைந்த வண்ண மலர்க் காலம் அது. உடலைக் குறித்து அறியாத குழந்தைப் பருவமும் உடலோடு முட்டி மோதுகின்ற முதுமைப் பருவமும் மனித வாழ்வில் உண்டு. உடலை நேசிக்கின்ற, உடலையே ஒரு கொண்டாட்டமாக ஆக்கவும் செய்கின்ற காலமும் மனிதனுக்கு உள்ளது. அதுதான் இளமைக் காலம். 





What kind of Muslim are you?  The question seems odd, but for those who seek to divide and conquer Islam, the answer has become increasingly important.  Even more disturbing are the labels we assign ourselves.

In our families few of us can say we’ve never disagreed with our siblings.  But when a family member makes a mistake—even a big one—or has a view we don’t agree with, even fewer of us decide to divorce that family and change our name.  Today, the same is not true of our Muslim family. Today, we’re no longer just ‘Muslim.’  We’re ‘progressives,’ ‘Islamists,’ ‘traditionalists,’ ‘salafis,’ ‘indigenous,’ and ‘immigrant.’ And each group has become so alienated from the other, that we’ve almost forgotten that we share a common creed.




First Published : 22 Feb 2012 01:10:57 AM IST

Last Updated : 22 Feb 2012 02:47:31 AM IST

அண்மையில் மிலாதுநபி விழா வந்து சென்றது. உலகத்தின் பாதி மீது தன்னுடைய மார்க்கத்தின் வாயிலாக ஆட்சி செலுத்தும் நபிகள் பெருமானாரின் பிறந்தநாள் விழா அது.
 உலகத்தில் பல நபிகள் தோன்றினார்கள்; மோசசிலிருந்து ஏசுவரை எண்ணற்றோரை நபிகள் என்று ஏற்கிறது திருக்குரான். ஆனால், முகம்மதுநபிதான் இறுதி நபி!
 முகம்மது நபி "சல்லல்லாகூ அலைஹி வசல்லம்' என்று போற்றப்படுபவர்; சல் என்றால் நபி!
 நபிகள் நாயகம் அரபு மண்ணை மட்டுமன்றி, அனைத்துலகத்தையும் மனத்தினில் கொண்டு, ஒரு புதிய வாழ்வியல் நெறியை உருவாக்கினார். அதைத் "தீன்' என்று இசுலாம் சொல்கிறது.
 அந்தத் "தீனில்' ஈடுபாடு கொண்டோர் ஒரு கூட்டமாக உருவாவது இயற்கை. அந்தக் கூட்டம் தன் மனம் போன போக்கில் உருவாகிவிடாமல், அதை ஒரு சமூகமாக உருவாக்கியதில்தான், ஓர் அமைப்பைக் கட்டியமைப்பதில் நபிகள் நாயகத்துக்கு உள்ள அளப்பரிய திறனும் மேதைமையும் பளிச்சிடுகின்றன. அதை "உம்மா' என்பார் நபிகள் நாயகம்.

 

கல்வி வளர்ப்போம்.! ஒற்றுமையாய் கரங்களை பற்றிப்பிடிப்போம்! இன்ஷா அல்லாஹ்.


ஒரு காட்டில் ஒரு சிங்கம் ராஜாவாக இருந்தது. அந்த ராஜா சிங்கத்தை ஒரு முயல் ஏமாற்றி கிணற்றில் தள்ளிவிட்டது என்ற கதையையும், ஒரு நதியில் ஒரு முதலை இருந்தது அந்த முதலையை ஒரு நாவல் மரத்தில் இருந்த குரங்கு ஏமாற்றியது என்ற கதையையும் பள்ளிகளில் இளம் வகுப்புகளில் படித்து இருக்கிறோம்.  எவ்வளவு வலிமை பொருந்தியவர்களாக இருந்தாலும் தனது அந்த வலிமையை உணராவிட்டால் உண்மையிலேயே அவர்களுக்கு வலிமை இல்லை என்பது வெள்ளிடை. அதேபோல உலகில் மாபெரும் சமுதாயமாக இருக்கும் இஸ்லாமிய சமுதாயம் தனது பலத்தை தான் உணரவில்லை. அதனால் யானை படுத்துவிட்டால் ஈக்களும் எறும்புகளும் கூட மேலே ஏறி மொய்க்கத்தான் செய்யும்.

ஏழாம் அறிவு –
தேவையற்ற காலத்தில்
தமிழுணர்ச்சி தூண்டிய வியாபாரப் படம்.
Iyyappa Madhavan



ஏழாம் அறிவு பற்றிய முன்னோட்டங்கள் விளம்பரங்கள் என்னைக் கிறுக்குப்பிடிக்க வைக்க திரையிடப்படும் சிறப்பு முதல் காட்சியைப் பார்த்துவிடும் பேராவல் தொற்றிக்கொண்டது. ஆகையால் எவ்வளவு காசு செலவானாலும் பார்த்துவிடவேண்டுமென்ற வெறியுடன் அலைந்து திரிந்து ரூபாய் இருநூறுக்கு சாலிக்கிராமம் எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் திரையரங்கில் முன்பதிவு செய்துவிட்டு தமிழ்திரைப்படம் உலகத் தரத்திற்கு எடுக்கப்பட்டிருக்கிறதென்ற இறுமாப்பில் நண்பர்களிடம் டிக்கெட் எடுத்துவிட்டதைப் பற்றிச் சொல்லிப் புளாகாங்கிதமடைந்துகொண்டேன்.

 
 
  தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. பத்திரிக்கைகளில்  மாநில வாரியாக, மாவட்ட வாரியாக முதலிடம் வென்ற மாணவ மாணவிகளின் புகைப்படங்கள் மின்னுகின்றன.  மாநில  தகுதி பெற்ற நபர்களின் செவ்விகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டன.  “நான் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன், இஞ்சினியராகுவேன், ஐஏஎஸ் ஆவது தான் லட்சியம்”
 
அதிக மதிப்பெண் பெற்றோரை வாழ்த்த நான் என்னளவில் தயராயில்லை, காரணம் ஏன்பலர் குறைவான  மதிப்பெண் வாங்கினார்கள் எனும் போது, அதிக மதிப்பெண்களைக்காணும் போது என்னையறியாமல் அதன் மீது வெறுப்புதான் வருகிறது. பக்கத்து வீட்டிலோ அல்லது தெரிந்தவர்கள் வீட்டிலோ உள்ள பிள்ளைகள் தன் மகன்/மகளை விட அதிக மதிப்பெண் வாங்கும் போது நடக்கின்ற விசயம் எல்லோரும் அறிந்ததே.
 

தொழில்நுட்ப முன்னேற்றமும் , நூதனங்களும் இன்றைய உலகின் போராட்டங்களின் உத்திகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. அவை இன்று இணைய (சைபர்) உலகை (Cyber World) புதிய யுத்த முன்னரங்காக மாற்றம் பெறச்செய்வதில் பாரிய செல்வாக்கு செலுத்துகின்றன. இன்றைய உலகின் போராட்டங்களிலும், புரட்சிகளிலும் இணையத்தின் பங்கு, இதுதொடர்பாக  முன்னணி நாடுகளின் நிலைப்பாடு குறித்த ஒரு சிறு கட்டுரை அண்மையில் அல்ஜசீரா ஆங்கில சேவை வலையமைப்பின் இணையதளத்தில் வந்த ஒரு கட்டுரையை தமிழில் இயன்றவரை மொழி பெயர்த்து வாசர்களுக்காக பகிர்ந்து கொள்கின்றேன்.

ஐந்தாவது பரிமாணத்தில் போராடுதல்

யுத்த முறைமைகளில் ஐந்தாம் பரிமாணம்என்று அது அழைக்கப்படுகின்றது. நிலம், கடல், வான், மற்றும் விண்வெளிகளுக்கு மேலதிகமாக இன்று இணைய(சைபர்) உலகமும் புதிய யுத்த முன்னரங்காக பரிமாற்றம் அடைகின்றது.




* ஊடகத் துறையில் கவனம் செலுத்த வேண்டியவர்கள் யார் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
இன்று தொடர்பூடகங்கள் மனிதனது சிந்தனையை, நம்பிக்கையை,உளப்பாங்கை கட்டியெழுப்புவதில் முன்னிலை வகிக்கின்றன. சமூகங்களை உருவாக்குவதற்கான அடிப்படைகளை ஊடகங்களே இடுகின்றன. எனினும், கவலைக்குரியவிடயம், முஸ்லிம்கள் - அதிலும் குறிப்பாக சமூகத் தலைவர்கள் - பள்ளிவாயல் கட்டுவதையும் ஸதகா செய்வதையுமே தமது வக்ப் சொத்தின் மூலம் நிறைவேற்ற முடியுமான அமல்கள் என்று நினைக்கின்றனர். மனிதர்களைக் கட்டியெழுப்பும் அல்லது சமூகங்களைக் கட்டியெழுப்பும் ஊடகத் துறையில் கவனம் செலுத்துவதை தேவையற்றது என்று எண்ணுகின்றனர்.

பத்தாம் நாள் போராட்டம், பதினொன்றாம் நாள் போராட்டம், பனிரெண்டாம் நாள் போராட்டம் என ஒவ்வொரு நாளும் முழுப்பக்க படங்களோடும், ஒவ்வொரு பக்கத்திலும் எதாவது தாக்குதல் செய்திகளுமாய் தினகரன் பத்திரிகை வெறிபிடித்து வருகிறது. டயர் எரித்தாலும் செய்தி. உம்மன் சாண்டியை எரித்தாலும் செய்தி. கேரள எல்லையில் கூட்டம் சென்றாலும் செய்தி. தனியாய்  நின்றாலும் செய்தி. கேரள மக்களுக்குச் சொந்தமான கடைகளை அடித்து நொறுக்கினாலும் செய்தி. தமிழக மக்கள் கேரளாவிலிருந்து விரட்டப்பட்டாலும் செய்தி. தினகரனுக்குத்  தாங்களும் சளைத்துப் போய்விடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் தினமலரும், தினகரனும் வரிந்து கட்டிக்கொண்டு செய்திகளை வெளியிடுகின்றன.  பிறகு முல்லைப் பெரியாறில் தண்ணீர் வரவேண்டும் என்பதா அவர்களின் நோக்கமாக இருக்கப் போகிறது?

முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில்
புயலைக் கிளப்பிவிட்டு தமிழ் நாட்டை
பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச
வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.
மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில்
கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் !

ஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சந்தைகளில் ஒன்று... மதுக்கூர் சந்தை. ஒரு குடும்பத்துக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். சாமான்கள் மிகத் தரமாகவும் விலை வெகு மலிவாகவும் இருக்கும். மதுக்கூர் சந்தையின் முக்கியமான அம்சம், கருவாடும் நல்லெண்ணெயும். ``அட... அந்த நல்லெண்ணெயும் கருவாடும் கூடிக் குழம்புக்குக் கொடுக்கும் ருசியே தனி`` என்பார்கள். தமிழ்நாட்டில் கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், கொல்லிமலை, பொள்ளாச்சி, வால்பாறை, தேனி, பாவூர்சத்திரம் என்று ஒவ்வொரு பகுதிக்கும் இப்படி ஒவ்வொரு சந்தையின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தச் சந்தை மரபு இன்று, நேற்றல்ல; பல நூற்றாண்டுகளாகத் தொடர்வது.

தீராத விளையாட்டுப் பிள்ளை தண்ணீர்,
தீர்வென்ன தமிழகமே!
டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ) 

தமிழக மக்களின் தாகம் தீர்க்கவும், தமிழக விவசாயிகள் வாழ்வாதாரத்தின் அடித்தளமாகவும், பறவைகள், விலங்கினங்கள் துள்ளி விளையாடவும் வழி வகை செய்யும் ஆறுகளாக வற்றாத காவேரி, முல்லைபெரியார், பாலாறு, தாமரவரணி உள்ளன. அவை அத்தனையுமே கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநில எல்லையிலுள்ள மலைபகுதியிளிருந்து புறப்படுகின்றன. ஆனால் அவை அத்தனையுமே கடைசியில் சங்கமமாவது பெருங்கடலேயாகும். 


- M அப்துல் ரஹ்மான் M.P.


 சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது. செல்போன், சின்னத்திரை, பெரிய திரை, கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். காரணம் எதுவாயினும் சரி செய்யப்பட வேண்டிய தலையாய விசயம் இது. இந்தப் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களையே சாருகின்றது.


ற்காலத்தில் குறிப்பாக ஹிந்துமதவாத அரசியல் வாதிகளும்ஹிந்துத்துவ வளைதளங்களும்,ஹிந்துக்கள் என்றால் அனைவரும் ஹிந்துக்கள்தான்,என்ற ஒரு வகைதொகையற்ற கணக்கை காட்டி,குறிப்பாக இஸ்லாம்,கிருத்தவம்,சீக்கியம் அல்லாத இந்தியாவில் உள்ள மக்கள் நார்திகர்கள் உள்பட அனைவரும் ஹிந்துக்கள் என்கிறார்கள். எனவே ஹிந்து என்றால் என்னஅதில் சாரும் மக்கள் யாவர். என அதன் உண்மை நிலை அறியும் சிறு முயற்சியே இந்த பதிவு... யார் மனதையும் புண்படுத்தும் பதிவு அல்லமதநல்லிணக்கப் பதிவு...


இலவசத்தின் விலை இதுதான்!
- மாலன்

கிடுகிடுவென்று
 ஏறிய பெட்ரோல் விலை கொஞ்சம் இறங்கியதாக வந்த செய்தி உண்மைதானா இல்லைமனப் பிரமையா என்று கொஞ்சம் திகைப்போடுபுன்னகைக்கலாமாஎன அரைத் தயக்கத்தில் இருந்த மக்கள் தலையில் ‘மடேர்’ என வந்திறங்கியது தமிழக அரசின் அணுகுண்டு அறிவிப்பு.


 எனக்கு வந்த மின்னஞ்சல் இது. 


இனவாதம் / இனவெறி என்றால் என்ன தெரியுமா சகோ..? 

"ஒருவர் தன் சமுதாயத்தை நேசிப்பது இனவாதமாகுமா?" என்று முஹம்மது நபி(ஸல்)யவர்களிடம் தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "இல்லை. தனது சமுதாயம் (என்ற காரணத்தால் அவர்கள்) புரியும் கொடுமைகளுக்கு துணைபோவதுதான் இனவாதம் ஆகும்" என்றார்கள். (நூல்: மிஸ்காத்)  

BY சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

கடந்த ரெண்டு மூன்று நாட்களாய் இணையத்தில் மட்டும் சில ஆட்கள், ஏதோ தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை கழுத்தை நெரித்து கொல்ல முயல்கிறார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தார்களே.. அப்படி என்ன படம் என்று பார்க்க போனேன். அதுவும் இது தமிழனின் வரலாறு என்றும் இதை பார்க்காவிட்டால் தமிழனே இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று  என்று பயப்படும் அளவிற்கு இவர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருந்ததினால் தியேட்டரில் சென்று பார்க்க முடிவு செய்து போனேன்.



தமிழக முதல்வர் அவர்களுக்கு மொக்கையனின் மனம் திறந்த மடல்!
- இந்நேரம்.காம்

தமிழக முதல்வர் அவர்களுக்கு,

தமிழகத்தில் உள்ள இரு பெரிய கட்சிகளுக்கும் நிர்வாகம் செய்யத் தெரியவில்லை என்பதைக் கடந்த ஆட்சியில் கருணாநிதி நிரூபணம் செய்த பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய ஆறே மாதத்தில் நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நீங்கள் பேருந்து கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதுடன் பால் விலையையும் லிட்டருக்கு ரூ 6.25 உயர்த்தியுள்ளீர்கள். இது போதாதென்று மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தி தமிழக மக்களின் வயிற்றில் பாலை வார்க்கப் போகிறீர்கள்.
Powered by Blogger.