இளமையைக் கொண்டாடும் இஸ்லாம் - Syed Sulthan
உங்கள் குழந்தைகள்
உங்களுடைய குழந்தைகள் அல்லர்.
அவர்களைப் போல் ஆக
நீங்கள் முயலலாம். ஆனால்,
அவர்களை உங்களைப் போன்று
ஆக்க முயலாதீர்.
ஏனெனில், வாழ்க்கை முன்னோக்கியே
செல்கிறது, பின்னோக்கி அல்ல.
- கலீல் ஜிப்ரான்
இளமைக் காலம் மனித வாழ்வின் வசந்த காலமாகும். பூக்களும் பூமணமும் பூந்தேனும் நிறைந்த காலம். பிறரை ஈர்க்க விரும்புகின்ற பருவம். பிறரால் ஈர்க்கப்பட விரும்புகின்ற பருவம். கனவுகள் நிறைந்த வண்ண மலர்க் காலம் அது. உடலைக் குறித்து அறியாத குழந்தைப் பருவமும் உடலோடு முட்டி மோதுகின்ற முதுமைப் பருவமும் மனித வாழ்வில் உண்டு. உடலை நேசிக்கின்ற, உடலையே ஒரு கொண்டாட்டமாக ஆக்கவும் செய்கின்ற காலமும் மனிதனுக்கு உள்ளது. அதுதான் இளமைக் காலம்.
வாழ்வில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கட்டம் இது. குழந்தை, முதுமை எனும் இரு கட்டங்களுக்கிடையில் வருகின்ற ஒரு சிறிய கால அளவு. பத்து முதல் பத்தொன்பது வயது வரையிலான இந்தக் கால அளவைத்தான் உலக சுகாதார அமைப்பின் வரைவிலக்கணப்படி பதின்பருவம் (கூஞுஞுணச்ஞ்ஞு) என்கிறோம். வலது கால் இளமைப் பருவத்திலும் இடது கால் குழந்தைப் பருவத்திலும் இருக்கின்ற நிலை அது. சில விவகாரங்களில் நான் குழந்தை அல்ல என்ற எண்ணம் தோன்றும். வேறு சில விஷயங்களில் நான் இன்னும் வளரவில்லையா என்ற கேள்வியை எழுப்பும். குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்தை நோக்கிப் பயணிக்கும் இந்தப் பயணக் காலம் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறிச் செல்லும் (கூணூச்ணண்டிtடிணிண கஞுணூடிணிஞீ) காலமாகும்.
இந்தக் கட்டத்தில்தான் ஒரு குழந்தை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் வளர்ச்சி பெறுகிறது. தன்னம்பிக்கையும் பகுத்தறியும் ஆற்றலும் கொண்ட தனி ஆளுமையாகயும் நல்ல சமூக ஜீவியுமாகவும் ஒருவரை மாற்றியமைக்கின்ற, தனி மனிதனின் ஆளுமை செதுக்கப்படுகின்ற வளர்ச்சிக் காலமும் இதுவேயாகும்.
மற்றவர்களைவிட வேறுபட்ட ஆளுமை தமக்கு உண்டு என்பதை பதின்பருவத்தினர் உணர்ந்துகொண்டு, தனித்துவமிக்க சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்குகின்றனர். இதன் மூலம் முதியவர்களிடமிருந்து ஓர் இடைவெளியை ஏற்படுத்திக் கொள்வதோடு, சம வயதுடையவர்களோடு மேலும் நெருங்கிப் பழக விரும்புகின்றனர். வீட்டையும் வீட்டைச் சுற்றியும் மட்டுமே இருந்த ஒரு குழந்தையின் உலகம் வெளியுலகத்துக்கு விரிவடைகிறது. தம் சொந்த அனுபவங்கள், திறமைகள் ஆகியவற்றின் மீது அதிக நம்பிக்கை வைத்து, அதற்கேற்றவாறு செயல்படத் தொடங்குகின்றனர்.
இந்த மாற்றத்தை பதின்பருவத்தின் வளர்ச்சிக் கட்டமாக உள்வாங்கிக் கொள்ள பெரியவர்கள் தயங்குகின்றபோதுதான் பதின்பருவ வாழ்வு சிக்கல் நிறைந்ததாக மாறுகிறது. தங்களின் கையிலும் மார்பிலும் தூக்கித் தாலாட்டி பாலூட்டி சீராக வளர்த்த தம்முடைய குழந்தை, தம் சொந்த விருப்பப்படி நடக்கவும், விவகாரங்களை எதிர்கொள்ளவும் முற்படுகின்றபோது பெற்றோர்களே பதறுகின்றனர். குழந்தை வளர்ந்துவிட்டது என்பதை நம்பத் தயங்குகின்ற அவர்களின் உள்ளத்தில் கவலை ரேகைகள் படர்கின்றன. பதின்பருவத்துக்குள் கடந்து செல்கின்ற குழந்தையின் உடலையும் உள்ளத்தையும் வளர்ச்சியையும் உயர்வையும் சரிவரப் புரிந்துகொள்ளாமல், விலங்குகளுடனும் தடைகளுடனும் அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என பெற்றோர் நினைக்கின்றனர். பெற்றோர்களின் இந்தப் பரிதவிக்கும் உள்ளம்தான் எப்போதும் பதின்பருவத்தைச் சிக்கல் நிறைந்ததாக ஆக்குகிறது.
நண்பர்களும் தனிமை உலகமும் இளமைக்கு அவசியம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். நண்பர்கள்தான் அவர்களின் உலகம். மற்ற எந்த உறவுகளையும்விட இளமைப் பருவத்தை அடைந்த மகனோ மகளோ தம் நண்பர்களுடன் இருப்பதையே விரும்புகின்றனர். இங்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியது, அவர்களுக்கான நல்ல நண்பர்களை அடையாளம் காட்டுவதும், அவர்களை நேசிப்பதைப் போன்றே அவர்களின் நண்பர்களையும் நேசிப்பது, அவர்களை ஏற்றுக்கொள்வது ஆகியன மட்டுமே. இவ்வாறு பெற்றோர்களின், பெரியவர்களின் அங்கீகாரமும் ஊக்குவிப்பும் சமவயதினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கின்றவர்களின் பதின்பருவம் இனிமையாய்க் கடந்துசெல்லும். இப்படிச் சொல்வதால் பதின்பருவத்தில் அவர்களை முழுமையான சுதந்திரத்துடன் விட்டுவிட வேண்டும்