நாம் புரிந்து வைத்து இருக்கிற அனுபவங்களின் அடிப்படையில் நாம் உலகத்தை பார்க்கிறோம்.
மற்றவர்களையும் அதே பார்வையிலேயே பார்க்கிறோம்.
ஒவ்வொருவரின் பார்வைக்கும் உலகம் ஒவ்வொரு விதமாக தோன்றுகிறது.
ஒவ்வொருவருக்கும் அவரவர் தரப்பு நியாயங்கள்.
நமக்கு இடையேயான பரஸ்பர விவகாரங்களில், அனைத்திற்குமாக இறுதித் தீர்ப்பு அளிக்க எந்த மனிதர்களாலும் முடிவதில்லை. அது சாத்தியமும் இல்லை.
இப்போது இங்கே நான் சொல்ல நினைத்த விஷயம் கூட, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் தான் புரியும் என நினைக்கிறேன்.