அதிகப்படியான பேச்சை குறைத்துக் கொண்டுநாம் பேசுவது சிலது என்றாலும் அதை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்த முயல்வது நலம்.
எந்த ஒரு செயலும் கண்டிப்பாக நடந்தே ஆக வேண்டும் என்ற நம் அதீத ஆசையோடு ,கூடவே அதன் நடைமுறைச் சிக்கலைக் குறித்தும் யோசிக்க  வேண்டும். 
 நாம் வாழ்வது   மனிதர்களோடு..
பூமியில் வாழும் நாம்பூமிக்கு கீழும்வானத்திற்கு மேலும் வாழும் ஜீவராசிகளை போல சக மனிதர்களை கையாண்டால் நடைமுறைக்கு ஆகாது.
ஒரு நல்ல  விசயமே என்றாலும் கூட , எதார்த்தத்தில் அதை எப்படி நடைமுறைப்படுத்துவது  என்பதில் நமக்கு  பொறுமையும், மனோ நிலையை புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லையென்றால் நாம் சக மனிதர்களின் உள்ளங்களை கிழித்து விட நேரிடலாம். 

Powered by Blogger.