9/11 :

அமெரிக்க அரசு 9/11 மூலமாக இரண்டு கொலைவெறிகளை போர் என்ற பெயரில் அரங்கேற்றியது. மக்கள் நலனுக்காகவே போர் என்கிற பொய்யை நம்ப 
வைத்து உலகின் பெரும் பகுதி மக்களை அடிமுட்டாளாக ஆக்குவதில் வெற்றியும் கண்டுள்ளது. 

ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தது. இறந்தவர்களுக்கெல்லாம் பயங்கரவாதிகள் என்கிற பட்டம் சூட்டி கவுரவித்தது.

இலட்சக்கணக்கான மக்களை அநாதைகளாக்கியது.
இரானையும், சிரியாவையும் அடுத்த இலக்கு என்பதாக அச்சுறுத்தி வருகிறது.

தன் எண்ணெய் கொள்ளைகளுக்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்குவதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறது.

9/11 மூலமாக முஸ்லிம்களை பயங்கராவதிகளாக உருவகப்படுத்தும் தன் முயற்சியை உத்வேகத்துடன் செய்து வருகிறது.

தான் மட்டுமே உலகின் பெரிய ரவுடி என்கிற மமதையில் தனது ஆயுத வியாபாரத்தை வெற்றிகரகமாக நடத்தி வருகிறது.

மாற்றம் என்பதை தாரக மந்திரமாக உபயோகித்து மாயாஜாலங்கள் காட்டி வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா , முன்னாள் அதிபர் புஷ்ஷின் வழியில் இம்மியும் பிசகாது நடக்கிறார்.

இந்த பதினோரு ஆண்டுகளில் சியோனிச , அமெரிக்காவின் போர் பயங்கரங்களால், ஊடக அக்கிரமங்களால், நேரடியாகவும் - மறைமுகவாகவும் பாதிக்கப்பட்ட இளைய சமூகம் இப்போது வாலிப வயதை அடைந்து இருக்கிறது.

இன்னும் ஒரு தினத்திற்கு பின், உலகம் நினைவு தினத்தை அனுஷ்டிக்க இருக்கிறது.

மனித குலத்திற்கெதிரான பல்வேறு போர்களுக்கும்,அழிவுகளுக்கும் பின்னே அமெரிக்க, சியோனிசத்தின் பங்களிப்பு அளப்பரியது. அதைப்போலவே, அந்த வரிசையில் 9/11 மூலமாக
இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான அமெரிக்காவின் நேரடி மற்றும் மறைமுக போர்கள் ஆரம்பிக்கப்பட்டு இந்த நூற்றாண்டில் பதினோரு ஆண்டுகள் கடந்து விட்டன.

பொய்கள் வெற்றி கொள்ளப்படும்.
நீதி வெல்லும்.
உலகம் அமைதி பெறும்.
இளம் சமூகம் முன்னேற்ற பாதையில் வீறு கொண்டு நடைபோடும்.

தஹ்ரிர் சதுக்கம் மாற்றத்தின் முதல் மலரை மலர செய்து இருக்கிறது.
Powered by Blogger.