///Sep 5, 2012 : 40 feared killed, many injured in fire in Sivakasi fireworks unit; toll could go up/////

சட்டம் தன் கடமையை செய்யாது.
நாம் செய்யவும் விடுவதில்லை.

நம்மில் ஒவ்வொருவரும் நம் வலிமைக்கு ஏற்ப, நமது பணபலம், அரசியல் பலம், செல்வாக்கை வைத்து, சிபாரிசுகளை வைத்தது சட்டத்தை எந்த அளவுக்கு எங்கெல்லாம் வளைக்கக் முடியுமோ, அந்த அளவுக்கு வள
ைக்க முயற்சிப்போம்.
நமது வேலையை பார்ப்போம்.
காரியம் சாதிப்போம்.

(அபராதம் கட்டாமல் தப்பிக்க,
ட்ராபிக் கான்ஸ்டபிளுக்கு லஞ்சம் கொடுக்காதவர்கள் நம்மில் வெகு சிலரே இருக்க கூடும். )

இப்படியாக வளைந்து, வளைந்து சட்டத்தின் முதுகு கூன் விழுந்து குறுகி கொண்டே போகிறது.
சட்டம் சும்மா வளைந்து விடுமா.?
அதை வளைக்க ஊழியர்களின் உதவி, அரசியல்வாதிகளின் உதவி, அதிகாரிகளின் உதவி நமக்கு தேவை.
நம்முடைய தேவைக்கு சட்டத்தை வளைக்க அவர்கள் செய்யும் உதவிக்கு
அன்பளிப்பு என்ற பெயரில் இலஞ்சத்தைக் கொடுத்து கொடுத்தே நம் ஒவ்வொருவரின் கரங்களும் சிவந்து விட்டன.
இப்படியாக எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம்..
லஞ்சம் இல்லையெனில் எந்த வேலையும் உருப்படியாக நடக்காது என்கிற நிலைமை உருவாக்கி விட்டோம். 

பொதுமக்கள் நலன் காக்க பல்வேறு சட்டங்கள் உண்டு நம் நாட்டில்.
ஆனால் அவற்றில் பெரும்பாலானவை வளைக்கப்படுகின்றன.

விதிமுறைகளை மீற, முறையற்ற அனுமதி பெற,
அளவுக்கு மீறி இலாபம் சம்பாதிக்க  வசதியாக 
சட்ட விதிமுறைகள் லஞ்சத்தின் மூலம் வளைக்கப்பட்டு ,
பின் ஏதாவது ஒரு விபத்து நடக்கும் போது தான்
அரசு தற்காலிகமாக ஏதாவது செய்கிறது.
சில கண்துடைப்பு கைதுகள் நடக்கிறது.
மீடியாக்களுக்கு பரபரப்பு செய்தி கிடைக்கிறது.
நாமும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பிரச்னையை குறித்து விவாதிப்போம்.

காலம் கடந்தால் பின் எல்லாம் காற்றில்..

அடுத்த பிரச்சனை, அடுத்த செய்தி, அடுத்த பரபரப்பு, அடுத்த நடவடிக்கை என இப்படியே காலம் உருண்டு ஓடுகிறது.

நாட்டில் லஞ்சம் தான் ஆட்சி செய்யும்.
பணம் தான் எதையும் தீர்மானிக்கும் சட்டம் தன் கடமையை செய்யாது.
நாம் செய்யவும் விடுவதில்லை.


நாட்டில் லஞ்சம் தான் ஆட்சி செய்யும்.
பணம் தான் எதையும் தீர்மானிக்கும் என்றால்
அப்புறம் நம்ம நாட்டுல ஒழுங்கா எது நடக்குமாம்.??
Powered by Blogger.