ரத்தங்களால் நிறம் மாறியிருக்கிறது எங்கள் மதில்கள்..
தூக்கங்களை தொலைத்து, விழித்திருந்தும்
தாக்குதல்கள் ஓய்ந்தபாடில்லை..


அடிக்கவும் மனம் வரவில்லை;.
அதன் உடலில் பாய்வது எனது ரத்தம்..

மறைந்து இருந்து தாக்க,
அவர்களும் கூட கற்றுக் கொண்டு விட்டார்கள்..
எங்கிருந்தோ கூட்டமாய் வருகிறார்கள்..
உக்கிரத்தோடு கடிக்கிறார்கள்..

விட்டு விட முடியுமா.?
எத்தனை உயிர்கள் - எத்தனை பலிகள்..
அடித்து அடித்தே எம் கரங்களில் குவிகிறது கொசுக்களின் தேகம்..

பிறிதொரு நாளில் கொசுக்கள்,
அனகோண்டாவாய் பரிமாண வளர்ச்சி அடையுமோ.?
ஐயோ.!

ஹ்ம்ம்..
மெஜாரிட்டி   அரசால் மைனாரிட்டி மின்சாரத்தை கூட தர முடியவில்லை.
இதில் உறக்கம் தொலைத்த இரவுகளில், கொசுத் தொல்லை வேறு..!

(இப்படி பொலம்புற மாதிரி ஆகியிருச்சே.!)
Powered by Blogger.