நம்மோடு இருக்கும் வரை தான் ஒருவர் நல்லவர். நம்மை விட்டு பிரிந்து சென்று விட்ட பின் அவர் வழி தவறி சென்று விட்டார் என்கிற ரீதியில் நினைப்பது ஒன்றும் எவருக்கும் சரியில்லையே.!

இறைவனுக்காக , அவனிடம் கூலியைப் பெற வேண்டும் என்பதற்காக , தூய்மையான உள்ளத்தோடு பணியாற்றும் எவரும் தன் கூட்டணியை மாற்றலாம்.
நோக்கம் ஒன்றே என்று இருந்தாலும் ஒவ்வொரு அமைப்பும், இயக்கமும் செல்லும் வழிமுறை வேறு வேறு தானே! ஒருவர் தன் செயல்பாடுகளை வேறு வகையில் அமைத்துக் கொள்ள நாடுகிறார் என்றால், அதற்காக புதிய களம் காணுவதில் தவறு ஒன்றும் இல்லையே.!

நம் ஒவ்வொருவரும், நாம் மறுமையில் வெற்றி பெரும்நோக்கத்திற்காக வேண்டியே கூட்டமைப்போடு இணைந்து பணியாற்றுகிறோம்.
அதுவல்லாமல் நாம் இணைந்துள்ள கூட்டமைப்பின் கொடி உயரே பறக்க வேண்டும் என்பதை முக்கிய இலக்காக கொண்டால், நம் மறுமை இலக்கில் தோல்வி அடைய நேரிடலாம்.!
Powered by Blogger.