அன்புள்ள கமல் ஹாசனுக்கு.!
இந்த நிலையில் உங்கள் பங்களிப்பை மீண்டும் ஒரு முறை செலுத்தி இருக்கிறீர்கள்...
உன்னைப் போல் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவர இருக்கிறது உங்கள் விஸ்வரூபம்.
சபாஷ்.?..!!
வாழ்க உங்கள் கலைச் சேவை.(.!)
இனி நாம்
***************
1)கோபத்தின் காரணமாக கூட , எவரையும்
நாகரிகம் இல்லாத முறையற்ற வார்த்தைகளில் திட்டுவது
ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு அழகல்ல.
2)நம்முடைய எதிர்ப்பை காட்டும் அதே வேளையில் வெறும் வெற்று கோபத்தையும் தாண்டி,
நம்முடைய நிலைப்பாட்டிற்கு பொதுமக்களும் நடுநிலையாளர்களும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக
நம்முடைய செயல்பாடுகள் அமைத்துக் கொள்ள வேண்டும்.
நம்முடைய
எதிர்ப்பை பதிவு செய்யும் போது அது பொதுமக்களின் அத்தியாவசிய நலனுக்கு பாதிப்பை உண்டாக்கும் வகையில்
அமைந்து விடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
3)இது போன்ற திரைப்படங்களையும் , முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களையும்
ஏன் முஸ்லிம்கள் இந்த அளவுக்கு எதிர்க்கிறார்கள் என்கிற பொது புரிதலை
அனைத்து மக்களுக்கும் தெளிவாக விளக்கும் வகையில் நம்முடைய கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும். அதை பரவலாக்க வேண்டும்.
4)நாம் கோபத்தில், அடக்கமுடியாத ஆத்திரத்தில் நாம் எவரையேனும் திட்டுவது நம்முடைய உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்குமே தவிர
நமக்கு நல்ல பலன் ஒன்றையும் பெற்றுத் தராது.
நடுநிலையாளர்களே
************************
1)இது வெறும் கருத்து தானே.
இதை கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டியது தானே என சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் இது போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்மறை பிரச்சாரங்கள்,
வெறும் கருத்து சுதந்திரம் என்பதை தாண்டி,
முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனையும் சந்தேகப் பார்வை பார்க்கும் சூழ்நிலைக்கு
ஆளாக்கி வைக்கிறது என்கிற விபரீதத்தை நீங்கள் கவனிக்க தவறி விடுகிறீர்கள்.
பொதுமக்களே.
***************
1)அஃப்சல் குரு பற்றிய செய்திகளைப் பற்றி என்றால், முதல் பக்கத்தில் அதை வெளியிடும் தமிழ் மீடியாக்கள், அசிமானந்தா போன்றோரின் செய்தியை எல்லாம் இருட்டடிப்பு செய்கிறதே ஏன்.?
2)இந்த நாட்டில் முஸ்லிம் பெயர்களில் நடத்தப் படுகிற,நக்சலைட் , இனவாத,அல்லது காவிக் கும்பலால் நடத்தப்படுகிற எந்த வித தேச விரோத செயல்களையும் இந்திய முஸ்லிம் சமூகம் ஒரு போதும் அங்கீகரிப்பது இல்லை..
இதை இஸ்லாமும் ஆதரிப்பது இல்லை..
இதைப் புரிந்து கொள்வீ ர்களா.?
3)தவறு செய்பவர் எவராக இருந்தாலும், அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை..
அந்த நபருக்கு நீதியின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
ஆனால் அதே வேளையில் இஸ்லாத்தை குறித்தும், முஸ்லிம்களைக் குறித்தும், தவறான பிம்பத்தை பிரச்சாரம் செய்வதை , தமிழ் மற்றூம் இந்திய சினிமா, இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.. இதோ இப்போது வந்து இருக்கிற துப்பாக்கி, வெளிவர இருக்கிற விஸ்வரூபம் போன்ற முஸ்லிம் விரோத திரைப்படங்களை,
நடுநிலையாலர்களும், சமூக ஆர்வலர்களும் கட்டுப்படுத்த வேண்டும்..
4)மற்ற மாநிலங்களை விட, நம் தமிழகத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை நிலவுகிறது..
அதை சீர்குலைக்கும் வகையில், குறிப்பாக முஸ்லிம் விரோத உணர்வை, நச்சு உணர்வை விதைக்கும் பயணம் போன்ற தமிழ் சினிமாக்களும், மீடியாக்களும் எப்போது தங்கள் பதிவுகளை
நியாயத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளும்.?
5)தன் இனம், தன் மதம், தன் மொழி என்ற அடிப்படையில் செய்யப்படுகிற, நீதிக்கு புறம்பான செயல்களை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிப்பது இல்லை..
அப்படிப் பட்ட செயல்களை இனவாதம் என்கிறது இஸ்லாம்.
இனவாத்தில் இருப்பவன், இஸ்லாத்தின் பார்வையில் இறை நம்பிக்கையே இல்லாதவன் என்கிறார் இறைத்தூதர் முஹம்மது நபி (சல்) அவர்கள்..
6)இந்த நாட்டில் நீதியும், மனித நேயமும் இன்னும் செத்துப் போய் விடவில்லை..
அது உயிரோடு தான் இருக்கிறது..
தன் சுய நலத்திற்காக , மதத்தின் போர்வையில், அல்லது ஜாதி, மொழி, இனம் அடிப்படையில்,
தேச விரோத செயல்களை செய்யும், சமூக விரோதிகளை,
அவர்கள் எந்த மதம்,இனம்,மொழியைச் சேர்ந்தவரக இருந்தாலும்,
எப்படிப்பட்ட அரசியல் அதிகாரத்தில் இருந்தாலும்,
இந்தியன் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் சேர்ந்து,
அவர்களை களை எடுப்போம் என்கிற ரீதியில் நேர்மறை உணர்வோடு கருதுக்களைப் பதிவு செய்யுங்கள்..
முஸ்லிம்களே
**********************
1)கண் முன்னே அநீதி இழைக்கப் படும்போது, பாதிக்கப்படுபவர் எவராக இருந்தாலும் அவருக்கு உதவ வேண்டும்..
அமைதியாய் இருந்து விடக் கூடாது என போதிக்கிறது இஸ்லாம்..
இஸ்லாத்திற்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் பரப்பப்படும் இந்த சூழ்நிலையில்,
இந்த உண்மையை,
இதை இந்த நாடும், நாட்டு மக்களும், புரிந்து கொள்ளும் விதத்தில் முஸ்லிம்கள் எடுத்து உரைக்க வேண்டும்..
2)இன்றைய சூழ்நிலையில் அனாச்சாரங்களும், அலங்கோலங்களும் சினிமாவை ஆக்கிரமித்து இருப்பதால், சினிமா என்ற வலிமை வாய்ந்த ஊடகத்தையே,
இந்திய முஸ்லிம் சமூகம் புறக்கணித்து வருகிறது..
இது மாற வேண்டும்..
இதற்கு மாறாக குறைந்த பட்சம், காலத்தின் தேவைக்கு ஏற்ப,
தங்கள் அடையாளங்களையாவது பதிவு செய்கிற வகையில்,
குறும்படங்கள், ஆவணப்படங்கள், போன்றவற்றை தயாரிக்க முஸ்லிம் சமூகத்தை சார்ந்த வல்லுநர்கள் முன் வர வேண்டும்.
3)தங்கள் அமைதி, மற்றும் நிசப்தத்தை களைத்து கலைத்துறையில் முஸ்லிம்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செலுத்த முன் வர வேண்டும்..
4)இனி வரும் "துப்பாக்கிகளை " அநியாயம் செய்யவும், அப்பாவிகளுக்கு எதிராக விஷங்களை பரப்பவும்
பயன்படுத்த முடியாத வண்ணம்,
அதனைக் கட்டுப்படுத்த ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை
சமூக தலைவர்கள் எடுக்கட்டும்.
5)ஒற்றுமை எப்போதும் நல்ல பலனைத் தரும்.
சமீப காலங்கில் தமிழக முஸ்லிம் அமைப்புகள் சமூகத்தின் பொதுவான பிரச்சனைகளில் இணைந்து குரல் கொடுப்பது நல்ல ஒரு மாற்றம்.
சமூக நலனை முன்னிறுத்தி இணைந்துள்ள கரங்களின் இணைவு என்றென்றும் தொடரட்டும்.
நம்முடைய நோக்கம் இயக்கம் வளர்ப்பதல்ல.
இறைவனின் செய்தியை இந்த நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பதே நம் அடிப்படை நோக்கம்.
நாம் வாழும் இந்த நாட்டில் அனைவரும் விரும்புவது அமைதியையே.! நமக்கு ஆதரவு தெரிவிக்காத அனைவரும் நமக்கு எதிரானவர்கள் அல்ல.
இதை அமைப்பின் தலைவர்களும் அதன் ஊழியர்களும் நன்கு உணர்ந்து கொண்டு அதன் அடிப்படையில் தங்கள் விருப்பு, வெறுப்புகள்,செயல்பாடுகள், ஒத்துழைப்புகள் மற்றும் ஆதரவுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
தெரிந்தோ அல்லது அறியாமையின் காரணமாகவோ "விஸ்வரூபங்கள்" விதைக்க நினைக்கிற விஷ விதைகள் வெறும் புஸ்வானமாக போகட்டும்.
இறைவன் அருள் புரிவானாக..
-Abbas Al Azadi
- Abbas Al Azadi