எங்களுக்கு வழி ஒன்றும் தெரியவில்லை
பெரும் பெரும் வலிகளைத் தவிர..
உங்கள் விழிகளில்
எமக்காக கசிந்துருகும்
ஒரு துளி
அபூர்வ கண்ணீர் கூட,
எம் நிரந்தர கண்ணீரை துடைக்க
வழி ஒன்றும் காண்பதில்லை.
ஒ வல்லரசு தேசங்களின் மவுன சாட்சிகளே!
எங்களை இருண்ட கண்டத்து மக்கள் என்றீர்.
இருட்டில் வாழ்வது நாங்களா?
அல்லது எம்மை இருளில் தள்ளியது நீங்களா.!
பசித்தால் சாப்பிட வேண்டும் என்பது
உங்கள் நிலைப்பாடு.
பசி வாராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பது
எம் கஷ்டப்பாடு.
புகைப்படங்களை எடுத்துத் தள்ளுகிறீர்.
விருதுகளை அள்ளிக் குவிக்கிறீர்.!
எம்மை அருங்காட்சியக மனிதராக்கி அழகு பார்த்தலை தாண்டி,
அழும் எம் குழந்தாயின் நிலையை
நாளையேனும் மாற்ற உருப்படியாய்
வழியேதுமுண்டா உங்கள் ஐ.நா.விடம்?
எம்மை மனிதராய் பாருங்கள்.
எம் மண்ணை எங்கள் நிலமாய் பாருங்கள்.
அந்தோ!
என்ன தேறும் - என்கிற கோணத்தில் தான் உலகின்
எல்லா தேசங்களும் எம் நிலத்தை உற்று நோக்குகிறது
எம் சவங்களைத் தாண்டி.!
-Abbas Al Azadi
பெரும் பெரும் வலிகளைத் தவிர..
உங்கள் விழிகளில்
எமக்காக கசிந்துருகும்
ஒரு துளி
அபூர்வ கண்ணீர் கூட,
எம் நிரந்தர கண்ணீரை துடைக்க
வழி ஒன்றும் காண்பதில்லை.
ஒ வல்லரசு தேசங்களின் மவுன சாட்சிகளே!
எங்களை இருண்ட கண்டத்து மக்கள் என்றீர்.
இருட்டில் வாழ்வது நாங்களா?
அல்லது எம்மை இருளில் தள்ளியது நீங்களா.!
பசித்தால் சாப்பிட வேண்டும் என்பது
உங்கள் நிலைப்பாடு.
பசி வாராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பது
எம் கஷ்டப்பாடு.
புகைப்படங்களை எடுத்துத் தள்ளுகிறீர்.
விருதுகளை அள்ளிக் குவிக்கிறீர்.!
எம்மை அருங்காட்சியக மனிதராக்கி அழகு பார்த்தலை தாண்டி,
அழும் எம் குழந்தாயின் நிலையை
நாளையேனும் மாற்ற உருப்படியாய்
வழியேதுமுண்டா உங்கள் ஐ.நா.விடம்?
எம்மை மனிதராய் பாருங்கள்.
எம் மண்ணை எங்கள் நிலமாய் பாருங்கள்.
அந்தோ!
என்ன தேறும் - என்கிற கோணத்தில் தான் உலகின்
எல்லா தேசங்களும் எம் நிலத்தை உற்று நோக்குகிறது
எம் சவங்களைத் தாண்டி.!
-Abbas Al Azadi