குட்டிக்கதை:
அது ஒரு மதிய வேளை.
அழகான பூங்கா ஒன்றின் புல்வெளி.
மாலை தெருமுனைக் கூட்டத்தில்,
வறுமை "ஒழிய" வேண்டுமென
வழுவாய் பேச
அவர் தன்னை
தயார் படுத்திக் கொண்டு இருந்த வேளையில்,
தன் கவனம் சிதைத்து,
தன்னிடம் பிச்சை கேட்ட அந்த சிறுவன்
மீது கடும் கோபம் வந்தது அந்த பேச்சாளருக்கு.!
கோபத்தில் அடிக்க கையை ஓங்கிய அவர்,
சற்றே கருணையோடு வெறும்
அறையோடு நிறுத்தினார்.
பின்னே.!
உரை தயாரிப்பு கேட்டு விட்டதன்றோ.!
பிறகென்ன.!
வறுமை ஓடிப் போய் "ஒளிந்து" கொண்டு விட்டது.
சுபம்.
-Abbas Al Azadi