போய் வா தோழியே! உன் மனதில் கல்லூரிக்கனவு. என் விழியில் பெருங்கனவு.!
உன் விரல்களில் மோதிரக் காப்புகள்.. என் விரல்களில் காப்புகள் மட்டும்.!
புத்தகம் சுமக்க நீ பழகிக் கொண்டாய். பாரம் சுமக்க நான் கற்றுக் கொண்டேன்.
நாம் இருவரும் இப்போது பின் நோக்கியே பார்க்கிறோம். முன் நோக்கியும் பார்த்துப் போ தோழியே.! டெல்லி மனிதர்கள் தேசம் முழுவதுமுண்டு..
பெல் அடிக்கும் முன் நீ பள்ளி போய் திரும்பி வா.! தம்பி அழுகும் முன் வீடு நான் போய் சேர வேண்டும்.
பெடல் மிதிக்கும் என் கால்கள் ஒரு நாள் உலகம் வெல்லும் எனும் நம்பிக்கை எனக்குள்ளும் உண்டு.!
ஏழைகள் எப்போதும் ஏக்கத்தோடுதான் அலைய வேண்டும் என்பதில்லை.. இல்லாததற்காய் கலங்கி நிற்காதவரை, என் வாழ்விலும் எப்போதும் மகிழ்ச்சியே.! - Abbas Al Azadi
|