தோழர் கமல் ஹாசன் அவர்கள் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை இன்று பார்த்தேன்.தெரிந்தோ தெரியாமலோ கமல் தனது விஸ்வரூபம் படத்தின் மூலம் அமெரிக்காவின் கொள்கைப்பரப்பு செயலாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
படம் வெளிவரும் முன் நடைபெற்ற பெரும்பாலான தொலைகாட்சி விவாதங்களின் போது பல்வேறு நண்பர்கள் சொன்னது போலவே ,படத்தில் முஸ்லிகளுக்கு எதிராக நேரடி காட்சிகள் மற்றும் வசனங்கள் பெரும்பாலும் இல்லை. கமல் அந்த நோக்கத்தில் படத்தை எடுத்த மாதிரியும் தெரியவில்லை.
ஆனால், தனி நபர் ஒருவர், நான் முஸ்லிம்களுக்கு எதிரி இல்லை. ஆனால் சங் பரிவாரின் அதி தீவிர ஆதரவாளன் என சொல்வாரேயானால் , அவரது நிலைப்பாடுகளும், செயல்பாடுகளும் எப்படி முஸ்லிம்களை பாதிக்கும் வண்ணம் இயல்பாகவே அமையுமோ,
அப்படிப்பட்ட அமைதல் இப்படத்தின் மூலம் அமைந்து இருக்கிறது கமலுக்கு.
கமல் இப்படத்தில் எடுத்துள்ள அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு, அமெரிக்கா செய்யும் அனைத்து ஆக்கிரமிப்பு போர்களையும், கொலைகளையும் நியாயப்படுத்தும் பின்னணிக்கு உலகநாயகன் கமலை இட்டு சென்று இருக்கிறது.
இது தவறுதலாக நிகழ்ந்த நிகழ்வா? அல்லது கமலின் கட்டாய சூழ்நிலையா.? அல்லது ஆஸ்கார் கனவிற்கான தூண்டிலா.? அல்லது வேறு என்ன.? ஏன் இப்படி நிகழ்ந்தது என்பது கமலுக்கும் மக்களுக்குமே வெளிச்சம்.
இப்படத்தின் மூலம்,
முஸ்லிம்கள் அன்றாட வாழ்வில் பின்பற்றும் தொழுகை, குரான் ஓதுதல், அல்லாஹு அக்பர் என சொல்லுதல், பிரார்த்தித்தல்,அமெரிக்க எதிர்ப்பு மனோநிலை,பர்தா, கல்வி, போன்ற செயல்பாடுகளில் சர்வதேச முஸ்லிம்கள் சார்ந்த ஒரு வித எதிர்ப்பு மற்றும் தவறான மனை நிலையை இப்படம் நிச்சயம் உருவாக்கும். அதை விட முக்கியமானது தலிபான்கள் குறித்த நிலைப்பாட்டை, இப்படம் அமெரிக்க பின்னணியில் மக்களிடயே ஏற்படுத்தவும்,பரவலாக்கவும் செய்யும்.
கமல் இப்படத்தை உலகத் தரத்தில் எடுத்துள்ளார் என்பதிலோ, நன்றாக நடித்துள்ளார் என்பதிலோ மாற்றுக் கருத்தும் எதுவும் எமக்கும் இல்லை.
ஆனால், முழுக்க முழுக்க அமெரிக்க பொய்களின் மீது எழுப்பப்பட்டுள்ள கோட்டையாக திகழ்கிறது இப்படம்.
மக்களின் நம்பகத்தன்மையை மூளை சலவை செய்து, அதன் மூலம் அமெரிக்க ஆக்கிரமிப்புகளுக்கும் கொலைகளுக்கும் முற்றிலும் நியாயம் கற்பிக்கவோ , அல்லது அமெரிக்காவின் அத்துமீறல்களின் போது அமைதியாக வேடிக்கை பார்க்கும் மன நிலையையோ தான் இது போன்ற படங்கள் ஏற்படுத்தும்.
ஒரு கேள்வி.?
தலிபான்கள் மழலாவை தாக்கினார்கள். பெண் கல்வியை தடை செய்கிறார்கள். அபின் பயிர் இடுகிறார்கள். பெண்களை நவ நாகரிகமாக இருக்க அனுமதிப்பதில்லை. இசையை தடுக்கிறார்கள். இன்னும் இன்னும் சில.
ஆனால் இவை எல்லாம் சரியான தகவலா , அல்லது தவறான தகவலா என்பது நமக்கு உறுதியாக தெரியாது.
ஏனென்றால், அமெரிக்க ஊடகங்களின் பார்வையில் தான் இவை அனைத்தையும் உண்மை என்று நாம் நம்புகிறோம்.
இதே போன்று தான், இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா சொன்ன பெரும் உண்மையை(..!) நம்பித்தான் அந்த நாட்டின் மீது இது நாள் வரை அமெரிக்கா நடத்தி வரும் படுகொலைகளை, சுரண்டல்களை நாம் அமைதியாக அங்கீகரிக்கிறோம். அல்லது வேடிக்கை பார்க்கிறோம்.
ஒருவேளை மேலே கண்ட தலிபான்கள் குறித்த தகவல்கள் மற்றும் கர்ப்பிதங்கள் உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் , அதற்காக ஆப்கன் மற்றும் இராக்கில், அமெரிக்க ராணுவம் செய்யும் படுகொலைகளையும், அந்த நாட்டையே நிர்மூலமாக்கி, நித்தமும் பொழியும் குண்டு மழையையும்,
அவ்விரு நாடுகளில் அமெரிக்க கூட்டுப்படை ஏற்படுத்தியுள்ள அமைதி இன்மையையும், மரண ஓலத்தையும், அந்த நாட்டு மக்களுக்கு சுதந்திர பரிசாக அளிக்கும் அமெரிக்காவின் களவாணித்தனம் உண்மையில் சரியானது அல்லவே.?
தலிபான்கள் ஏன் அமெரிக்காவை எதிர்க்கிறார்கள் என்று நம் உள்ளத்தின் ஒரு மூலையில் எழும் கேள்விக்கு இப்படத்தில்
ஒரு சிறு பதிலும் இல்லையே.?
விஸ்வரூபம் – தலிபான்கள் குறித்த அமெரிக்காவின் ஊடக பிரச்சாரத்தை இந்திய மக்களிடயே அழுத்தமாக புகுத்த செய்யும் மற்றுமொரு மாபெரும் முயற்சி.
கமலின் ஆஸ்கார் கனவு கூட இதன் மூலம் நனவாகலாம்.
தலிபான்களுக்கும் அவர் தம் செயல்களுக்கும் நாம் வக்காலாத்து வாங்க தயாராக இல்லை. அது தேவையும் இல்லை. ஆனால் ஒரு பாவமும் செய்யாத கோடிக்கணக்கான மக்கள், குழந்தைகள் செய்த பாவம் என்ன.? அவர்கள் ஏன் நித்தமும் விமானத்தாக்குதலின் அச்சத்திலும், துப்பாக்கி சூட்டை எதிர் நோக்கிய பயத்திலும் நாட்களை கழிக்க நேர்கிறது.
அமெரிக்க இராணுவம் செய்வது சுதந்திரத்திற்கான போரா.? அல்லது வளங்களை சுரண்ட நடத்தும் அத்து மீறல்களா.?
நமக்கு சிறிதேனும் கருணை இருந்தால் , நாம் கொஞ்சமேனும் யோசிக்க வேண்டும் அல்லவா .?
முன்பே சொல்லியது போல,
தனி நபர் ஒருவர், நான் முஸ்லிம்களுக்கு எதிரி இல்லை. ஆனால் சங் பரிவாரின் அதி தீவிர ஆதரவாளன் என்றால், அப்படிப்பட்ட நபரின் நிலைப்பாடுகளும், செயல்பாடுகளும் முஸ்லிம்களையும், சிறுபான்மையினரையும் பாதிக்கும் வண்ணம், எப்படி இயல்பாகவே அமையுமோ,
அப்படிப்பட்ட அமைதல் தான் இப்படத்தின் மூலம் அமைந்து இருக்கிறது கமலுக்கு.

வெளிப்படியான அமெரிக்க ஆதரவு பிரச்சாரம் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துருவாக்கம் தன்னிச்சையாகவே வெளிப்பட்டும், கற்பிக்கப்பட்டும் விடுகிறது இந்த படத்தின் மூலமாக.
வாய் கொண்டு பலமாக பூக்களின் மீது ஊதினால் காற்றில் நறுமணம் பரவும். அதே வாய் கொண்டு பலமாக மிளகாய் பொடியின் மீது ஊதினால் காற்றில் என்ன பரவும்.? மக்களின் கண்களில் எரிச்சல் பரவும். சுவாசத்தில் கார நெடி பரவும்.
கமல் இப்படத்தின் மூலம் அமெரிக்காவின் அடுத்த கட்ட இந்திய நடவடிக்கைக்கு உதவும் வண்ணம் கருத்துருவாக்கத்தை தெரிந்தோ தெரியாமலோ உருவாக்க முனைகிறார்.
தெரிந்தோ தெரியாமலோ கமல் தனது விஸ்வரூபம் படத்தின் மூலம் அமெரிக்காவின் கொள்கைப்பரப்பு செயலாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
உலகம் முழுதும் தனது அடக்கு முறைகள் மூலமாக எதிரிகளை சம்பாதித்து வருகிற அமெரிக்க அரசு, தன்னிடம் உள்ள அனைத்து வகையான ஆயுதங்களையும் தன்னை எதிர்க்கும் அனைவருக்கு எதிராகவும் பிரயோகிக்கிறது.
சினிமா போன்ற ஊடகம் மூலமாகவும் தனது எதிர்மறை பிரச்சாரத்தை அது காலங்காலமாக நிகழ்த்தி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
நீங்க நல்லவரா.? கெட்டவாரா.? என்ற நாயகன் படத்தின் க்ளைமாக்ஸ் கேள்வியில், தெரியலையேப்பா என அழும் குரலில், அப்பாவியாய் பதில் சொன்ன கமல்,
இப்படத்தில் நீங்க நல்லவரா.? கெட்டவாரா.? என்ற அதே கேள்விக்கு ,நான் ஹீரோவும் தான் – நான் வில்லனும் தான் என தெளிவாக பதில் சொல்கிறார்.
குழம்பிப்போகப் போவதேன்னவோ நாடும் நாட்டு மக்களுமே.!
இறுதியாக,
சாவகாசமாக அமெரிக்காவில் சுற்றும் விஸ்வரூபம் படத்தின் வில்லன் ஓமர், விஸ்வரூபம் படத்தின் இறுதியில், வானத்து பிறையின் பின்னணியில் பாராசூட் மூலமாக இந்தியா நோக்கி தன்னுடைய பயணத்தை தொடர்வதாக காட்சி அமைத்துள்ளார் உலக நாயகன் அவர்கள் .
மக்களே உஷார்.!ஆப்கான்,இராக், பாகிஸ்தான் போன்ற நாடுகள் மீது அந்த நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்காக வேண்டி அமெரிக்கா இராணுவம் தினமும் பொழிந்து வருகிற குண்டுகளும், விமான தாக்குதல்களும் நமக்கும் ஏற்பட வேண்டாம். அப்படிப்பட்ட மயனா அமைதி நமக்கும் ஏற்பட வேண்டாம்.
அமெரிக்கா அது போன்றதொரு மயான அமைதியை, ஏதேதோ காரணங்களை கற்ப்பித்து, தனது, சதிக்கான வலையை இங்கும் பரப்பும் முன், தேசத்தையும், நாட்டு மக்களையும், காப்போமாக.
ஜெய் ஹிந்த்.
(படத்தில் கமல் சொல்லும் ஜெய்ஹிந்திற்கும், இதற்கும் தேசப்பற்றில் வித்தியாசம் எதையும் காணமாட்டீர்கள் என நம்புகிறேன். )