வறண்ட பூமி எங்களைக் கண்டு
வக்கனையாய் சிரிக்கிறது.
குளத்தடி வற்றிப் போய் பல் இளிச்சு கிடக்குது.
கண்மாயில் கலங்கிய தண்ணியை பாத்து கூட
நாள் பல நாளாச்சு.!
அடி ஆழத்துல அள்ளக்கூட
கிணத்துல சொட்டுத்தண்ணியில்லை.!
வயக்காட்டில் விதைச்ச நெல்லு,
வெளஞ்சு வீடு திரும்புமான்னு தெரியவில்லை.!
பொழியும் மழையின்றி
சொந்த வீட்டில் ஆக்கக்கூட சோறில்லை.!
அனுதினமும் நீர் சுமக்கும் எம் கரங்கள்
அடுப்படியில் நீர் சொரியும் எம் விழிகள்.
அன்பரே நீர் கண்டீரா எம் நிலையை.!
நாங்கள் இந்திய கிராமங்களின் இரும்பு மங்கைகள்.!
சுற்றிப்பார்க்க எம் இல்லம் வாரும்.!
எம் வாழ்க்கைக்கைக்கும்
மனித வாழ்க்கையென்றே பெயர்.!
எங்கள் பெயர்களும் இருக்குது
உங்கள் ஓட்டுப்பட்டியலில்.!
உம் இல்லங்களில் சேவல்கள் கூவும்.!
எம் வார்த்தைகளையும்
வெறும் கூக்குரலாய் எண்ணி
புறந்தள்ளி விடாதீர்.!
நகரத்து விரைவு வாழ்க்கையில்
தொலைந்து திரியும்
மின்னணு மனிதர்களே.!
எமக்காகவும் கொஞ்சம் பெரும் மனது கொண்டு கவலைப்படுவீரா.!
கண்ணீர் சொரிவீரா.!
எமக்காகவும் கொஞ்சம் கவலைப்பட சொல்லுங்கள்
உம் மாண்புமிகு அமைச்சர் பெருமன்னர்களை.!
அரசு ஒதுக்கும் தொகையெல்லாம்
எங்களை ஒதுங்கி வருவதில்லை.
எம் நிலை மாற்றித் தருவதுமில்லை.!
எம் வாழ்க்கைக்கைக்கும்
மனித வாழ்க்கையென்றே பெயர்.!
கருணைகள் வேண்டவில்லை.!
எம் உரிமைகளை எமக்கும் தாரும் என்றே
நெஞ்சம் கனக்க கேட்கிறோம்.
-@ Abbas Al Azadi
In Photo :
The fate of taibal women for drinking water in Visakapatnam region. Not only traibal women, climate change effects the livelyhood of women in rural area. Govt is still unable to supply enough drinking water. In Andra pradesh our Government Budget is more than Rs. 1,00,000/-crore per year. where all the money they are spending.??? its million dollor question to people of rural India.
Thanks to Society for empowerment of women and child advocacy.