முதல் பார்வையிலேயே தன்னுடைய மனம் கவரும் பெண்ணை காதலிக்க, அவளை கட்டாயப்படுத்த, தொந்தரவு செய்ய, பின் தொடர, இறுதியில் ஒரு நாள் உச்ச கோபத்தில் கத்த, பெண்ணின் பெற்றோரை அன்பை புரிந்து கொள்ள தெரியாத பழமைவாதிகளாக கருதி செண்டிமெண்ட் பிழிய அவர்களுக்கு அட்வைஸ் பண்ண, இன்னும் பல பல வேலைகளை செய்ய, முழு உரிமையும் ஆணுக்கு இருப்பதாக தான் தமிழ் சினிமா இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. தங்கள் வியாபார நோக்கத்திற்காக பள்ளிக் கூடத்தில் இருந்தே காதலிக்க தூண்டுகிறது நம் சினிமாக்கள்.

பள்ளிக் கூடத்திலும், கல்லூரியிலும் ஹீரோ செய்வதற்கு காதலை விட்டால் வேறு முக்கிய வேலையா இல்லையா.?

சினிமாவில் இயக்குனர் உபயத்தால், ஹீரோயின் தன்னை கட்டாயப்படுத்தும் ஹீரோவை படத்தின் இடைவேளைக்கு பின் காதலிக்க காதலிக்க ஆரம்பித்து விடுவாள்.

காதலிக்க வற்புறுத்தும் பெண் , அவனை காதலிக்க மறுத்தால் ஆசிட் என்ன, கொலை கூட செய்வான் தமிழக ஹீரோ.!

நிஜ வாழ்வில் அது நடக்க வேண்டுமே.!

பின் என்ன நடக்கும்.?
விதைப்பது தானே விளையும்.
Powered by Blogger.