அன்பு நேசிப்பதற்காக..!
வியாபாரப் பொருளாக்க அல்ல.!

இன்று காதலர் தினமாம்.!

ஏற்கனவே காதலிப்பவர்கள் சிறப்பு பரிசை கொடுக்க வேண்டுமாம். அல்லது பெற வேண்டுமாம்.

ஒரு தலைக் காதலில் விழுந்து தத்தளிப்பவர்கள் இன்று உடனடியாக சமயம் பார்த்து காதலை சொல்லி விட வேண்டுமாம்.

இது வரை காதலில் இறங்காதவர்கள் உடனடியாக அதற்கு முயல வேண்டுமாம்.

இப்படியெல்லாம் செய்யாதவர்கள் கல்லூரி , பள்ளிகளில் படிக்கச் செல்ல இலாயக்கே இல்லாதவர்களாம்.!

காதலன் அல்லது காதலி இல்லாத இளைய சமூகத்தின் உறுப்பினர்கள் வெறும் புத்தக புழுக்களாம்.

தமிழ் சினிமா உருவாக்கி வைத்து இருக்கும் பிம்பம் இது.

பள்ளிக்கொடத்துல போய் படிக்க சொல்லுங்க சார் முதல்ல..
ஒன்றாம் வகுப்பு படிக்கிறவனையும் காதலி காதலி என்று பிடித்து தள்ளுகிறீர்கள்.

காதல் சாதியை ஒழிப்பதாக சிலர் நம்புகிறீர்கள். அது சாதியை ஒழிக்கிரதோ இல்லையோ, காதல் என்கிற பெயரில் நிறைய இளைஞர்களின் இளமையை தொலைக்க வைக்கிறது..
கூடவே சிலரது கற்பையும் தொலைக்க வைக்கிறது..


சமூகத்துல நாங்களும் நல்லவங்க தான் என்று சொல்லிக்கறோம்.
நடக்குற இதெல்லாம் நல்லாவா இருக்கு.!?
பார்த்துட்டு வேடிக்கை பார்க்கறோம்.

காதலைக் குறித்து நாம் இங்கு எதுவும் சொல்ல வரவில்லை.
தங்கள் வியாபார நோக்கத்திற்காக, ஊடகங்கள் மூலமாக இளைஞர்களின் கவனத்தை முற்றிலுமாக காதலின் மீது குவிப்பது குறித்து நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதே நம் அடிப்படை நோக்கம்.

விநோதினிகள் இறந்த பின்னே கதறியும், அஞ்சலி செலுத்தியும் பயனில்லை. வரும் முன் காத்தல் நலம்.
Powered by Blogger.