மண்ணில் வளரும் செடிகளில்,
எல்லா செடிகளும் தனது அடிப்படை உரிமையின் பிரகாரமே நீரை உறிஞ்சுகிறது. 
தனது வேரை பூமியில் செலுத்துகிறது.
இயற்கையின் எந்த அம்சங்களெல்லாம் அதன் வளர்ச்சிக்கு உதவுமோ அதனுடைய பலன்களை எல்லாம் உபயோகித்து வளர் முயல்கிறது.

மனிதர்களாகிய நாம் , அந்த செடி,
நமக்கு அளிக்க இருக்கும் பலனைப் பொறுத்து,
அதை நல்ல செடி என்றோ,
களைச் செடி அல்லது விஷ செடி என்றோ வகைப்படுத்துகிறோம்.
நமக்கு பலனளிக்காத அல்லது கேடு விளைவிக்கக் கூடிய செடியை, மண்ணில் இருந்து பிடுங்கி எறிகிறோம்.

ரொம்ப நல்லவங்க நாம் எல்லோரும்.
நாம் சுய நலம் எதுவும் இல்லாதவர்கள்.

சக மனிதர்களில் பல நபர்களைக் கூட நாம் இதே அணுகுமுறையின் அடிப்படையிலேயே வகைப்படுத்துகிறோம்.
களை என சொல்லி அப்புறப் படுத்துகிறோம்.

மண்ணில் வளரும் செடிகளில் எல்லா செடிகளும் தனது அடிப்படை உரிமையின் பிரகாரமே நீரை உறிஞ்சுகிறது. வேரை பூமியில் செலுத்துகிறது.
இயற்கையின், சுற்றுப்புறத்தின் எந்த அம்சங்களெல்லாம் அதன் வளர்ச்சிக்கு உதவுமோ அதனுடைய பலன்களை எல்லாம் உபயோகித்து வளர் முயல்கிறது.
Abbas Al Azadi
Powered by Blogger.