நம்மோடு இருக்கும் நண்பரின் நிறை குறைகளை,
சம்பந்தப்பட்ட நபரிடம் கூற ,

துணிவும் அக்கறையும் இல்லாமல்,
அந்த நண்பர் மீது அக்கறை இருப்பதாக
வெறுமனே மனதிற்குள் மட்டும்
நம்பிக் கொண்டு இருப்பதில்
என்ன பயன்.?

நண்பரின் துன்பத்திலும், துயரத்திலும்
பங்கு கொள்ள மனம் இல்லாமல்
அவரின் செயல்பாடுகளில்
சரி-தவறுகளை குறித்து பேச
நமக்கு என்ன அருகதை இருக்க முடியும்.?

வியாபாரி இலாப நோக்கிற்காக மட்டுமே உடன் இருப்பான்.
தோழனின் உறவில், கூடவே அன்பும் அக்கறையும் இருக்கும்.

நாம் உறவைப் பேணுவதில் வெறும் வியாபாரியா.?
நல்ல மனம் கொண்ட நண்பனா.?
Powered by Blogger.