நான் முத்தி உர் ரஹ்மான் சித்திக்.
விசாரணைக்குப் பின் என்னை நிரபராதி என சொல்லுகிறது NIA(National Investigation Agency) .
- நன்றிகள் அவர்களுக்கு உரித்தாகட்டும்...

பொதுப்புத்தியில் முஸ்லிம் என்றால் பயங்கரவாதி என்கிற விஷத்தை விஷக் கருத்தை ஆழமாக ஊன்றி வருகிறார்கள்.
அதன் பாதிப்பே அப்பாவியான என்னை கைது செய்தது.!

தீவிரவாதிகளின் முக்கிய மூளையாக என்ன சித்தரித்தன காவல் துறையும் , ஊடகங்களும்,.

என் பெயரைக் கேட்டவுடனே என்னைக் கைது செய்வதில் முனைப்பும், ஆர்வமும் காட்டிய காவல் துறை அதிகாரிகள் வாழ்க.!

பத்திரிக்கையாளாக இருந்தும், எனக்காக குரல் எடுப்பக் கூட பயந்தவர்களாக இருந்தார்கள்
பொதுப்புத்தியில் பாதிக்கப்பட்டு போன என சக ஊடகவியலாளர்கள்.!

வாழ்க ஜனநாயகம். – வாழ்க விஷப் பிரச்சாரம் – வாழ்க
முன்முடிவுகள்.

விசாரணைக் கைதியாகவே எங்கள் இளமை கழிந்து விடும் அபாயத்தில் இருந்து இறைவன் எங்களை காத்துள்ளான்.
எங்கள் வழக்கில் மிகுந்த சிரத்தை எடுத்து போராடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.,

இன்று நான் நிரபராதி என சொல்லும் போது, எந்த ஊடகத்தையும் காணோம்.
எந்த தலைப்பு செய்தியிலும் என பெயர் இல்லை.
இது ப்ரேகிங் நியூஸ் இல்லையோ.!

http://www.newzfirst.com/web/guest/full-story/-/asset_publisher/Qd8l/content/i-was-a-victim-of-prejudice-by-security-agencies:-muthiur-rahman?redirect=%2Fweb%2Fguest%2Fhome

http://www.coastaldigest.com/index.php/news/51143-release-muthi-ur-rahman-immediately-nia-court
Powered by Blogger.