தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி?
மாதிரிக் கேள்விகள் (உங்களது விருப்பத்திற்கேற்றாற்போல, தேவைப்படும் மாற்றங்கள் செய்துகொள்ளலாம்)

1. எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தேதிவாரியாகக் குறிப்பிடும்படி வேண்டுகிறேன். உதாரணமாக, எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் எப்போது, எந்த அதிகாரியிடம் போய்...ச் சேர்ந்தது? அந்த அதிகாரியிடம் எவ்வளவு காலம் இருந்தது? இந்த காலகட்டத்தில் அவர் அதன் மேல் என்ன நடவடிக்கை எடுத்தார்?.

2. எனது விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளின் பெயர் என்ன? அவர்களது பதவிகளின் பெயர்கள் என்ன? ஏதாவதொரு அதிகாரி நடிவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறாரா?


3. தங்களது பணியைச் செய்யாமல் பொதுமக்களைத் தொந்திரவுற்கு உள்ளாக்கும் இந்த அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடிவடிக்கை எடுக்க முடியும்? இந்த நடவடிக்கை எடுக்க எவ்வளவு காலமாகும்?

4. இப்போதைய நிலையில் எனது வேலை எப்போது முடியும்?

5. என்னுடைய விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் உங்களால் பெற்றுக் கொண்ட பின்னர், உங்களிடம் விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு புகார்/ ஆகியவற்றைக் கொடுத்த அனைத்து நபர்களின் பட்டியலையும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். இந்தப் பட்டியலில் கீழ்க்கண்ட தகவல்கள் இருக்கவேண்டும்.

*விண்ணப்பதாரரின்/வரிசெலுத்துபவ​ரின்/மனுதாரரின்/பாதிக்கப்பட்டவ​ரின் பெயர் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட ரசீதின் எண்.

* விண்ணப்பம்/கணக்கு தகவல்அறிக்கை/மனு/புகார்-ன் தேதி.

* அவருக்கான பிரச்சினை தீர்க்கப்பட்ட தேதி.

6. மேற்படி விண்ணப்பங்கள்/கணக்குத்தகவல் அறிக்கைகள்/மனுக்கள்/புகார்கள் ஆகியவற்றில் அவற்றுக்கான வழங்கப்பட்ட ரசீதின் (பெறுகை ஒப்புதல் சீட்டு) எண் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் அடங்கிய ஆவணங்களின் நகல்கள் அல்லது அச்சுப் பிரதிகளை தயவு செய்து வழங்கவும்.

7. எனது மனுவை நீங்கள் பெற்றுக் கொண்ட பின்னர், பெறப்பட்ட விண்ணப்பங்கள்/கணக்குத் தகவல் அறிக்கைகள்/ மனுக்கள்/புகார்கள் ஆகியவற்றில் எதிலேனும் வரிசைக்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதையும், அதற்கான காரணங்களையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

8. இவ்வாறு நடந்திருந்தால் இது குறித்து எடுக்க வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைக்கான விசாரனை எப்போது நடைபெறத் தொடங்கும்?
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட காவல்துறை பிரிவுகளுக்கு தகவல் அளிக்கும் கட்டுப்பாட்டில் இருந்து விதிவிலக்கு அளித்துள்ளது.

1.சிறப்பு பிரிவு - குற்றப்புலனாய்வு
2.க்யூ பிரான்ச் - குற்றப்புலனாய்வு
3.சிறப்பு பிரிவு
4.பாதுகாப்பு பிரிவு
5.முக்கிய நபர்களுக்கான பாதுகாப்பு பிரிவு (கோர் செல் சி ஐ டி)
6.மாவட்ட சிறப்பு பிரிவு
7.போலீஸ் கமிஷனர் ஆணையக உளவுப் பிரிவு
8.சிறப்பு உளவுப் பிரிவு
9.கமிஷனர் ஆணையகம் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு பிரிவு
10.நக்சலைட் சிறப்பு பிரிவு
11.குற்றப் பிரிவு சி ஐ டி.
12.விஷேசப் புலனாய்வு பிரிவு
13.திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு
14.போதைப் பொருள் தடுப்பு உளவுப் பிரிவு
15.கொள்ளை தடுப்பு பிரிவு
16.பொருளாதார குற்றப் பிரிவு
17.சிலை திருட்டு தடுப்பு பிரிவு
18.வணிகக் குற்றப் புலனாய்வு பிரிவு
19.சிவில் சப்ளை சி ஐ டி
20.சைபர் க்ரைம் செல்
21.மாவட்ட குற்றப் பிரிவு மற்றும் நகர குற்றப் பிரிவு
22.சிறப்பு அதிரடிப்படை
23.தமிழ்நாடு கமாண்டோ படை
24.தமிழ்நாடு கமாண்டோ பயிற்சிப் பள்ளி
25.கடலோரப் பாதுகாப்பு படை
26.போலீஸ் ரேடியோ பிரிவு

 தகவல் அறியும் சட்டம் 2005 இன் கீழ் தகவல் அறிய வேண்டுகோள்

1.எந்த பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி தேவைப்படும் தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். (அரசு நிறுவனம்/அரசு உதவிபெறும் நிறுவனம்)

2.விண்ணப்பம் கைகளால் எழுதப்படலாம் அல்லது தட்டச்சு செய்யப்படலாம்.
...
3.விண்ணப்பங்கள் ஆங்கிலம், இந்தி அல்லது எந்த மாநில மொழியிலாவது சமர்ப்பிக்கலாம்

4.பின்வரும் தகவல்களோடு மனுவை தரவேண்டும்.

i.மனுவைப் பெற்றுக்கொண்ட துணை பொதுதகவல் அதிகாரி (APIO) அல்லது பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர்.

ii.பொருள்: தகவல் அறியும் சட்டம் பகுதி 6(1) இன் படி மேல் முறையீட்டுக்கான விண்ணப்பம்.

iii.பொதுத்தகவல் அதிகாரியிடமிருந்து எதிர்பார்க்கும் தகவல்கள்.

iv.விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர்
v.பிரிவு SC, ST & OBC

vi.விண்ணப்பக் கட்டணம்.

vii.வறுமைக்கோட்டிற்கு கீழ் நீங்கள் (BPL) வசிப்பவரா? ஆம்/இல்லை

viii.கைபேசி எண் (mobile no) மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் (இரண்டும் கட்டாயமில்லை) அஞ்சல் முகவரி.

ix.தேதி மற்றும் இடம்.

x.மனுதாரரின் இடம்.

xi.மனுதாரரின் கையொப்பம்

xii.இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் பட்டியல்..

6.மனு செய்வதற்குமுன் துணை பொதுதகவல் அதிகாரி/பொதுத்தகவல் அதிகாரியின் பெயர், கூறப்பட்டுள்ள கட்டணம் மற்றும் கட்டணம் செலுத்தப்பட வேண்டிய முறை ஆகியனவற்றைச் சரிபார்த்துக்கொள்ளவும்.

7.தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல் அறியும் மனுவினுக்கான கட்டணம் இருந்த போதிலும், தாழ்த்தப்பட்டவர்கள், மலைஜாதியினர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பவர்கள் ஆகியோருக்கு மனுவினைப்பெற கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

8.கட்டண விலக்கு வேண்டுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், மலை சாதியினர் மற்றும் வறுமை கோட்டின் கீழ் வசிப்பவர்கள் என்பதற்கான சான்றிதழைச் சமர்ப்பிக்கவேண்டும்.

9.மனுக்களை நேரிலோ அல்லது அஞ்சலிலோ சமர்ப்பிக்கலாம். அஞ்சலில் அனுப்புவதாக இருப்பின் பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும். கூரியர் மூலம் (courier) அனுப்புவதை அறவே தவிர்க்க வேண்டும்.

10.விண்ணப்பம்/மனுவினை இரண்டு நகல் எடுக்கவும். (அதாவது, மனு, பணம் கட்டியதற்கான ரசீது, நேரில் அல்லது அஞ்சலில் மனு அனுப்பப்பட்டதற்கான ஆதாரம் ஆகியன) அவைகளை பின்னாள் ஒப்பிடுதலுக்காக (future reference) பத்திரமாக வைத்திருக்கவும்.

11.நேரில் உங்களது மனுவை சமர்ப்பித்திருந்தால் அலுவலகத்தில் தேதியும் முத்திரையும் கூடிய ரசீதைப்பெற்று மிகக் கவனமாக வைத்திருக்கவும்.

12.கேட்ட தகவலைத் தரவேண்டிய காலம், பொதுத் தகவல் தொடர்பு அதிகாரி மனுவை பெற்றுக் கொண்ட நாளிலிருந்து தொடங்குகிறது.




தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி தகவல் அறிய சமர்ப்பிக்கப்படும் முதல் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்

1. முதல் மேல்முறையீட்டை எப்போது செய்வது
  • பொதுத்தகவல் அதிகாரி (Public Information Officer (PIO)) நீங்கள் கேட்ட தகவலைத் தர மறுத்து உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கும்போது.
  • நீங்கள் கேட்ட தகவலை பொதுத்தகவல் அதிகாரி 48 மணி நேரம் அல்லது 30 நாள்களுக்குள் தராத போது.
  • துணை பொதுதகவல் அதிகாரியினை பணியமர்த்தாத போது/பொதுத்தகவல் அதிகாரி உங்களது விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளாத போது அல்லது நீங்கள் கேட்கும் தகவலைத் தராத போது.
  • துணை பொதுத்தகவல் அதிகாரி உங்களது விண்ணப்பத்தை நிராகரித்து அதனை பொதுத்தகவல் அதிகாரிக்கு அனுப்ப மறுக்கும் போது.
  • பொதுத்தகவல் அதிகாரியின் தீர்ப்பு குறித்து நீங்கள் திருப்தியடையாதபோது
  • உங்களுக்காகத் தரப்பட்ட தகவல் போதுமானதாக (அ) தவறானதாக (அ) தவறான வழிகாட்டுதலுக்குக் காரணமாக இருக்கும்போது.
  • தகவல் அறியும் சட்டம் 2005 இன் கீழ் விண்ணப்பத்திற்கான கட்டணம் அதிகமென்று நீங்கள் எண்ணும் போது
2.முதல் மேல் முறையீட்டு விண்ணப்பத்தினை அனுப்ப உள்ள கால அவகாசம்
  • கூறப்பட்டுள்ள, காலாவதியாகிய நாளிலிருந்து 30 நாட்களுக்குள், அல்லது மாநில பொதுத்தகவல் அதிகாரியிடமிருந்து தகவல் பெற்ற (தீர்ப்பு அல்லது வேண்டுகோள் நிராகரிப்பு) பின், (SPIO) அல்லது மத்தியப் பொது தகவல் அதிகாரியிடமிருந்துத் தகவல் பெற்றபின் (CPIO).
  • மேல்முறையீடு (Appellate) தொடர்பான அதிகாரி, மேல்முறையீட்டாளர் தனது மனுவினைப் பதிவு செய்யமுடியாமல் தடுக்கப்பட்டார் என்று உணர்ந்தால், மேல் முறையீட்டாளரின் மனுவினை 30 நாட்கள் கடந்த பின்னரும் பெற்றுக்கொள்ளலாம்.
3.முதல் மேல்முறையீட்டு மனுவினை எழுதுதல்
  • விண்ணப்பத்தினை வெள்ளைத்தாளில் எழுதலாம் அல்லது விண்ணப்பம் கையால் எழுதப்பட்டிருக்க வேண்டும்; அல்லது தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • விண்ணப்பம் ஆங்கிலம், இந்தி அல்லது எந்த மாநில மொழியிலாவது எழுதப்பட்டிருக்க வேண்டும்.
  • தேவையான தகவலை அதற்குரிய படிவத்தில் தெளிவாகத் தரவேண்டும்.
  • சுய ஒப்பமிட்ட (self attested) விண்ணப்பத்தின் நகலையும் விண்ணப்பத்திற்கான கட்டணம் தரப்பட்ட சான்றையும், பொதுத்தகவல் அதிகாரியிடம் பெறப்பட்ட விண்ணப்பத்திற்கான ரசீதையும், தீர்ப்பின் நகலையும் விண்ணப்பத்துடன்/மனுவுடன் இணைக்க வேண்டும்.
  • விண்ணப்பம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் நகலையும் வைத்துக்கொள்ளவும்.
4.எங்கு முதல் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிப்பது?
  • பொதுத்தகவல் அதிகாரி இருக்கும் அதே அலுவலகத்திலுள்ள முதன்மை மேல்முறையீட்டு அதிகாரி (First Appellate Authority) இடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • நிறுவன நிலைமுறைப்படி (hierarchy) முதன்மை மேல்முறையீட்டு அதிகாரி பொதுத்தகவல் அதிகாரியைவிட உயர் பதவியிலிருப்பவராவார். எனவே, மேல் முறையீட்டு விண்ணப்பத்தினைப் பெறவும், தேவைப்படும் விவரங்களைத் தரவும் அல்லது மேல் முறையீட்டினை நிராகரிக்கவும் அவருக்கு உரிமையுள்ளது.
  • முதல் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்கும் முன், முதன்மை மேல் முறையீட்டு அதிகாரியின் பெயரையும், குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தையும் கட்டணம் செலுத்துவதற்குரிய முறையையும் தெரிந்து கொள்ள வேண்டும். (சில மாநிலங்களில் முதல் மேல் முறையீட்டு மனுவுக்கென கட்டணம் வசூலிக்காதபோதும், சில மாநிலங்களில் முதல் மேல் முறையீட்டு மனுவை இலவசமாகவே பெற்றுக்கொள்கின்றன.)
5.முதல் மேல் முறையீட்டு மனுவை எவ்வாறு அனுப்புவது?
  • பூர்த்தி செய்யப்பட்ட மனுவை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தரலாம்.
  • அஞ்சல் மூலம் மனுவை அனுப்ப நேரிட்டால் பதிவுத்தபாலில் அனுப்பவும். கூரியர் தபாலைத் (courier service) தவிர்க்கவும்.
  • நேரடியாகக் கொடுத்தாலும், அஞ்சல் மூலம் அனுப்பினாலும் இரண்டிற்கு ரசீதினைப் பெற்றுக்கொள்ளவும்.
6.தகவல் பெறக்கூடிய கால
  • பொதுவாக சாதாரண வழக்குகளில் 30 நாட்களிலும், விதிவிலக்காக உள்ள வழக்குகளுக்கான மனுக்களுக்கான பதிலை 45 நாட்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
  • முதன்மை மேல்முறையீட்டு அதிகாரி (First Appellate Authority (FAA)), மேல் முறையீட்டு மனுவைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து நேரம்/காலம் கணக்கிடப்படும்.

எந்த ஒரு இந்தியக்குடிமகனும் இந்த சட்டத்தின்கீழ் தகவல் பெறலாம்.

•இந்தச்சட்டம் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

அயல்நாட்டு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த சட்டத்தின்கீழ் தகவல் பெறலாம்.

•இந்திய குடிமகன்கள், அயல்நாட்டு வாழ் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தகவல் பெறும் உரிமைக்காக தங்களது விண்ணப்பங்களை, அந்தந்த நாடுகளில் உள்ள நமது நாட்டின் தூதரக அலுவலகங்களில் தேவையான கட்டணத் தொகை மற்றும் அதை செலுத்தும் முறை பற்றி அறிந்துக் கொள்ளலாம்.
மத்திய அரசின் கீழ்க்கண்ட காவல்துறை மற்றும் இதரத்துறை பிரிவுகளிடம் தகவல் கோரும் உரிமை மறுக்கப்படுகிறது.
1.புலனாய்வு துறை (Intelligence Bureau)
2.மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவு (Research & analysis wing of cabinet secretariat)
3.வருவாய் புலனாய்வு இயக்ககம் (Directorate of Revenue Intelligence)
4.மத்திய பொருளாதார புலனாய்வுதுறை (Central Economic Intelligence Bureau)
5.அமலாக்கப் பிரிவு இயக்ககம் (Directorate of Enforcement)
6.போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (Narcotic Control Bureau)
7.வான் ஆராய்ச்சி நிலையம் (Aviation Research Centre)
8.சிறப்பு எல்லைப் படை(Special Frontier Force)
9.எல்லைப் பாதுகாப்பு படை (Border Security Police)
10.மத்தியக் தனிக் காவல் படை (Central Reserve Police Force)
11.இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படை(India-Tibetan Border Police)
12.மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force)
13.தேசிய பாதுகாப்பு காவலர்கள் (National Security Guards)
14.அஸ்ஸாம் துப்பாக்கி அணி (Assam Rifles)
15.சிறப்பு பணிகளுக்கான துறை (Special Service Bureau)
16.சிறப்பு துறை (குற்றவியல் புலனாய்வு துறை - அந்தமான் நிகோபார்)
17.குற்றவியல் துறை (குற்றவியல் புலனாய்வு)-
நாகர் ஹவேலி - Nagar Haveli
18.சிறப்பு பிரிவு - லட்ச தீவு
மேற்கண்ட பிரிவுகளிடமிருந்து தகவல் கோருவது நாட்டின் பாதுகாப்பை, அயல்நாட்டு உறவுகளை, அரசு நிர்வாகத்தை பாதிக்கும் என்பதால் மத்திய அரசு தகவல் கொடுக்க மறுக்கும்.


தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி இணையம் மூலம் மத்திய தகவல் கமிஷனுக்கு விண்ணப்பம் அனுப்புதல்

உங்களுக்கு மத்திய பொது நிறுவனங்களிலிருந்து தகவல்கள் பெற வேண்டுமானால் மட்டுமே மத்திய தகவல் கமிஷனுக்கு வேண்டுகோள் அல்லது குறைகளை தெரிவிக்க வேண்டும்.

எப்பொழுது இணையம் (Online) மூலம் மத்திய தகவல் கமிஷனுக்கு குறைகளை தெரிவிக்கலாம்?

  • தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய பொது தகவல் அதிகாரி நியமிக்கப்படாது நிலையில் அல்லது மத்திய துணை பொது தகவல் அதிகாரி உங்கள் விண்ணப்பித்தை ஏற்றுக்கொள்ளாத நிலை போன்ற காரணங்களாலும் அல்லது மத்திய பொது தகவல் அகிகாரி, மத்திய தகவல் கமிஷனுக்கு உங்கள் விண்ணப்பித்தை தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பிரிவ (1) பிரிவு 19 ன் கீழ் அனுப்பவில்லையென்றாலும்
  • மத்திய பொது தகவல் அதிகாரி இச்சட்டம் மூலம் தகவல் பெறும் உங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தாலோ
  • குறிப்பிட்ட கால அளவுக்குள் உங்களுக்கு நீங்கள் கேட்ட தகவல் கொடுக்கப்படாமல் இருந்தாலோ அல்லது பொது தகவல் அதிகாரி உங்கள் விண்ணப்பத்திற்கு பதிலளிக்காமல் இருந்தாலோ
  • முறையான காரணமின்றி மத்திய பொது தகவல் அதிகாரி ஒரு குறிப்பிட்ட தொகையினை கட்டணமாக செலுத்தச்சொன்னாலோ
  • இச்சட்டத்தின் கீழ் மத்திய பொது தகவல் அதிகாரி நீங்கள் கேட்ட தகவலை அரைகுறையாகவோ அல்லது தவறாகவோ தெரிவித்ததாக நீங்கள் நம்பினாலோ
  • நீங்கள் கேட்ட தகவலுக்கு, மத்திய பொது தகவல் அதிகாரி பதில் கொடுத்து நீங்கள் திருப்தி அடையாமல் இருந்தாலோ
 

பிடிஎப் (PDF) அல்லது ஜேபிஜி (JPG) அல்லது ஜிப் (GIF) முறையில் தேவையான ஆவணங்கள்

  • வறுமைக்கோட்டிற்கு கீழ் நீங்கள் இருப்பதற்கான சான்றிதழ் (நீங்கள் கட்டணவிலக்கு கோரினால்)
  • வயதுக்கான சான்றிதழ் ( நீங்கள் மூத்த குடிமகனாக இருப்பின்)
  • ஆரோக்கிய சான்றிதழ் (நீங்கள் மாற்றுத்திறனுடையவராக இருப்பின்)
  • உங்களுடைய வழக்குக்காக ஏதேனும் விவரங்கள் தேவைப்படின் அதற்கான சான்றிதழ்கள்
  • எல்லா ஆவணங்களும் பிடிஎப் அல்லது ஜேபிஜி அல்லுது ஜிப் வடிவமாக இருக்கவேண்டும்
  • நீங்கள் இணைக்கும் ஆவணத்தின் அளவு 2 MB-க்கு மேல் இருக்கக்கூடாது.
 
 
இணைய விண்ணப்பத்தை (Online Application) பரிசீலனை செய்தல்

  • இணையம் மூலம் விண்ணப்பிக்க விரும்பினால் இந்த இணைய தள முகவரிக்கு கொடுக்கவும் http://rti.india.gov.in/rti_direct_complaint_lodging.php )
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன் “Save as Draft/ Submit” எனும் பொத்தானை அழுத்தவும்
  • விண்ணப்பம் டிராப்ட் ஆக பதிவானவுடன் உங்களுடைய விண்ணபத்திற்கென்றே ஒரு குறிப்பிட்ட அடையாள எண் வழங்கப்படும்
  • உங்களுடைய விண்ணப்பத்தை ‘Save as Draft’ ஆக சமர்ப்பித்தால், கடைசியாக சமர்ப்பிப்பதற்கு முன்பு உங்களுடைய விண்ணப்பத்தை திருத்தியமைத்துக் கொள்ளலாம்.
 
 
உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையினை அறிந்துகொள்ளுதல்
 
  • விண்ணப்பத்தினை பதிவு செய்தவுடன் அந்த விண்ணப்பத்தின் நிலையினை இணையம் மூலம் அறிந்துகொள்ளலாம்
  • உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையினை அறிந்து கொள்ளhttp://rti.india.gov.in/rti_check_request_status.php?cat=complசெல்லவேண்டும்.



Jazakkallah to Rajaghiri Gazzali
Powered by Blogger.