ஒடுக்கப்படுகிற;நசுக்கப்படுகிற;அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிற எந்த ஒரு தனி மனிதனோ அல்லது சமூகமோ தனக்கு ஏற்படும் அவலங்களுக்காக வருந்துவதும்; கண்ணீர் வடிப்பதும்; கூக்குரல் இடுவதும் இயற்கையே. !

அதைப் போலவே பாதிக்கப்படும் மக்களின் மீது பரிவு கொள்பவர்களும்,
அவர்களுக்காக வருந்துவதும்; கண்ணீர் வடிப்பதும்;கூக்குரல் இடுவதும்; தன ஆதரவு, உதவி மற்றும் ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதும் இயற்கையே. !

ஆனால், காலம் முழுவதும் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதால் மட்டுமே எல்லாமும் தானாக மாறி விடாது.!

நம் நிலை மாற வேண்டுமென்றால், வெறுமனே வருந்திக் கொண்டு இருப்பதையும் தாண்டி, நம்முடைய நிலையை மாற்றவும்; நம்மை மேம்படுத்திக் கொள்ளவும்; முன்னேற்றப்பாதையில் செல்லவும்; நமக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கவும்; என்னவெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அவற்றையெல்லாம் முடிந்தவரை முயற்சிப்பதே புத்திசாலித்தனமான செயலாக முடியும்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.?
Powered by Blogger.