தேசங்களின் அடிப்படையில் ஒரு பிரச்சினை எப்படி பார்க்கப்படுகிறது என்பதை அலசுவதே என் நோக்கம்.
பாலியல் வக்கிர செய்திகள், பெரிய விபத்துகள் , மற்ற குற்றங்கள் பற்றிய செய்திகள் வரும்போது மக்கள் எதிர் வினைகளையும் எலைட் க்ரூப் எனப்படும் அறிவு ஜீவிகளின் எதிர் வினைகளையும் கவனித்து இருக்கிறீர்களா?
குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும், கல்லெறிந்து கொல்ல வேண்டும் என சாதாரண எளிய மக்கள் ஆவேசம் அடைவார்கள்.. இவர்கள் உணர்ச்சி உண்மையானதுதான் என்றாலும் இது நிரந்தர தீர்வு ஆகாது... ஆனாலும் சிறுமை கண்டு பொங்கும் அடிப்படை உணர்ச்சியாவது அவர்களிடம் இருப்பது , இன்னும் கொஞ்சம் சுரணை நம்ம்மிடம் இருப்பதன் அறிகுறி என எடுத்து கொள்ளலாம்.
டில்லி சமீபத்தில் , குற்றவாளிகளுக்கு கிடைத்த டிரீட்மெண்ட் இந்த எளிய மனிதர்களின் சிறுமை கண்டு பொங்கும் அடிப்படை உணர்ச்சியின் வெளிப்பாடே.
இந்த நிலையில் அறிவு ஜீவுகள் களம் இறங்குவார்கள்.. ( அதுவும் தமிழ் பெண்கள் பாதிக்கப்பட்டால் களம் இறங்க மாட்டார்கள். “ இந்திய பெண்கள் “ என்றால்தான் இவர்களுக்கு கருணை சுரக்கும் )
இது போன்ற குற்றங்களுக்கு அந்த குற்றவாளிகளை பழி சொல்லக்கூடாது . இந்த குற்றத்துக்கு காரணம் சமூக பொருளாதார நிலைமைதான். அவர்களை பழி சொல்லி பயன் இல்லை. குற்றத்தினால் பாதிக்கப்பட்டவரை போல குற்றம் செய்தவர்களும் பரிதாபத்துக்கு உரியவர்கள்தான் என்பார்கள்... “ பாதிக்கப்பட்ட்டவர் என் சகோதரி , பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் என் சகோதரர்கள்.. அவர்களை தூக்கிலிடக் கூடாது என கமல் சொன்னதை கேட்டு இருப்பீர்கள்.
சரி. இதற்கு இந்த அறிவு ஜீவிகள் முன் வைக்கும் தீர்வு என்ன ?
சமூக மாற்றம் வேண்டும். சமூகம் மாறினால் , குற்றங்கள் குறைந்து விடும்.
அவ்வளவுதான் இவர்கள் தீர்வு.
நமக்கெல்லாம் இந்த எளிய தீர்வு தெரியாமல் போய் விட்டதே... நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. சமூகம் மாறினால் போதும் .
சரி. சமூகம் என்பது என்ன .. ? நாம் எல்லாம் சேர்ந்ததுதானே சமூகம்? நாம் ஒன்றும் செய்யாமல் இருந்தால் , அழுகிப்போன நம் போன நம் சமூகம் அதுவாகவே மாறி விடுமா என்ன ?
எதுவும் செய்யாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமா அதைத்தான் இவர்கள் செய்கிறார்கள்..
எப்படி எல்லாம் நொள்ளை சொல்கிறார்கள் ..பாருங்கள். லாஜிக்கலாக பேசி மடக்குவவதை கவனியுங்கள்..
குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்டங்களை மாற்ற வேண்டும்...
செல்லாது .செல்லாது... சட்ட மன்றம் , பாராளுமன்றம் , காவல் துறை , நீதி துறை போன்ற எல்லா இடங்களிலும் குற்றவாளிகள்தான் பதவிகளில் இருக்கிறார்கள். கடும் தண்டனை கொடுக்க இவர்களிடமே கேட்பதா... கூடாது. இப்போது இருப்பதே இருக்கட்டும்.
பாலியல் கல்வி , பாலியல் விழிப்புணர்வு தேவை.
செல்லாது செல்லாது. கல்வித்துறையில் இல்லாத பாலியல் குற்றங்களா.. இந்த முய்ற்சி வெற்றி பெறாது. இப்போது இருப்பதே இருக்கட்டும்.
இது ஒரு காட்டுமிராண்டி தேசம். பெண்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.
செல்லாது செல்லாது. எச்சரிக்கையாக இருந்தால் மட்டும் குற்றங்கள் குறைந்து விடுமா. எச்சைரிக்கையாக , பூட்டிய வீட்டில் இருந்தால் கூட குற்றங்கள் நடக்கத்தானே செய்கின்றன.. எச்சரிக்கையக இருக்க சொல்வது ஆணாதிக்கம். அதெல்லாம் முடியாது. இப்போது இருப்பதே இருக்கட்டும்.
பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகள் பாணியில் மிக கடுமையான தண்டனைகள் , மரண தண்டனை வழங்க வேண்டும்.
செல்லாது செல்லாது. மரண தண்டனையால் குற்றங்கள் குறையாது. மேலும் மரண தண்டனை உண்மையில் தண்டனை அல்ல. இதன் மூலம் இந்த உலகில் இருந்து குற்றவாளிக்கு விடுதலைதான் கிடைக்கிறது . எனவே இப்போது இருப்பதே இருக்கட்டும்.
************************************************
இப்போது ஒரு பயங்கரமான உண்மையை பார்ப்போம். அப்போதுதான் இஸ்லாமிய பாதைதான் நமக்கு தீர்வு அளிக்கும் என்பது புரியும்.
அறிவு ஜீவிகள் அனைவரும் மேற்கண்ட status quo மனோபாவத்தை பெற்று இருப்பதை பார்க்கிறோம். அதற்கு மக்கள் ஆதரவும் இருப்பதை பார்க்கிறோம்.
இந்த அறிவு ஜீவிகள் யார் என கவனித்தால் , ஆச்சர்யமாக இருக்கும்.
இடது சாரிகள், வலது சாரிகள் , ஆளும் கட்சி , எதிர் கட்சி , பகுத்தறிவாளர்கள் , ஆன்மீக வாதிகள் என எல்லா தரப்பில் இருக்கும் அறிவு ஜீவிகளும் ‘இப்போது இருப்பதே” போதும் என்ற மன நிலையில் இருப்பதை கவனிக்க முடியும்.
இவர்களுக்குள் எந்த தொடர்பையும் , பொது தன்மையையும் கண்டு பிடிக்க முடியாது.. எதிரெதிர் முகாம்களில் இருப்பார்கள்.
எருமை மாட்டில் மழை பெய்வது போல , இப்படி அசமந்தமாக இருக்கும் இவர்களிடம் ஒரே ஒரு பொது தன்மை உண்டு.
அவர்கள் அனைவரும் இந்தியர்கள் எனப்தே அந்த பொது தன்மை .
இப்படி மந்தமாக இருப்பதற்கும் , இந்தியர்களாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம்.
பசுமையே இல்லாத பலைவன பூமி , கடும் வெப்பம். சூடான ரத்தம் . கடும் விஷம் கொண்ட உயிரிகள்.
இந்த சூழ்னிலையில் சில நாடுகள் இருக்கின்றன. இங்கு வாழ்பவர்கள் அதற்கேற்ற தகவமைப்பை காலப்போக்கில் பெறுகிறார்கள். அரபு நாடுகளை உதாரணமாக சொல்லலாம்.
இங்கு தோன்றும் இசை , கலை , எழுத்து போன்றவை அதீத உணர்ச்சி கொந்தளிப்புடன் இருக்கும்.
கடும் குளிர் நிலவும் நாடுகள் சில இருக்கின்றன,. வெயில் வருவது அபூர்வம். அப்படி வரும் வெயிலை முழுதும் பயன்படுத்திக்கொண்டாக வேண்டும் , பனி பொழியும் கடும் குளிர் காலத்தில் எந்த பணியும் செய்ய முடியாது.
இந்த சவாலான நிலையில், குறைந்த நேரத்தில் வேலையை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் , காலப்ப்போக்கில் செயல் திறன் மிக்கவர்கள் ஆகி விடுகிறார்கள்.
இந்தியாவில் இந்த இரண்டு எக்ஸ்ட்ரீமும் கிடையாது. மிதமான குளிர் , மிதமான வெயில். சோம்பலான வாழ்க்கை , அடிமையாக வாழும் சுகம். மாற்றங்களை சந்திக்க வேண்டியிராத தட்ப வெப்ப்பம். இந்த சூழ் நிலையிலே வாழ்ந்து வாழ்ந்து , passion என்பதே இங்கு இல்லாமல் போய் விட்டது.
எதிலுமே மந்த தன்மைதான். மது வா ? அதில் தண்ணீரை கலந்து மந்தமாக்குவது. தே நீரா ? பாலை கலந்து மந்தமாக்குவது . இப்படியே செய்து செய்து , சித்தாதாங்களும் இங்கே வரும்போது , நீர்த்து விடுகின்றன.
உலகையே கலக்கிய கம்யூனிசம் , நம் ஊரில் ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் அலையும் அரசியலாக மாறிவிட்டதா இல்லையா ?
சோவியத் யூனியன் இருந்த காலத்தில் கம்யூனிச புரட்சிகளுக்கு ஆதரவளித்து வந்தனர். இதை தவிர இன்னொன்றும் செய்தனர். சில நாடுகளில் கம்யூனிச புரட்சி நடக்கும் சூழல் இருக்காது.. ஆனால் குறைந்த சதவிகித்தினர் மட்டும் புரட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள்.
அந்த குறைந்த சதவிகிதத்தினரை கைக்குள் போட்டுகொண்டு , சோவியத் யூனியன் மேற்பார்வையில் , ஒரு வித போலி புரட்சி ஏற்படுத்தி, ஆட்சியை கைப்பற்றுவார்கள்.
ஆனால் இந்தியாவில் மட்டும் அப்படி செய்ய முடியவில்லை. நம்மூர் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ரஷ்ய அதிபர் ஸ்டாலினை சந்தித்தபோது , நம் மக்களின் ஈர விறகு தன்மையை பார்த்து அதிர்ந்து விட்டாராம். இந்தியா இன்னும் புரட்சிக்கு தயாராகவில்லை என சொல்லி அனுப்பி விட்டாராம்.
கடவுள் மறுப்பு கொள்கை , கம்யூனிசம் என எந்த விஷ்யமும் இந்தியாவுக்குள் வரும்போது நீர்த்து போய் விடும்,
எனவேதான் இந்தியாவில் இருக்கும் எந்த இயக்கங்களாலோ , கட்சிகளாலோ ஒன்றும் செய்ய முடியவில்லை. செய்யவும் முடியாது.
பகுத்தறிவு , இடது சாரி, வலது சாரி , இந்துத்துவா, இந்துத்துவாவுக்கு எதிரானத்துவா என லேபிள்கள் மாறலாம். ஆனால் சரக்கு ஒன்றுதான்.
இந்திய தன்மை எனும் இந்த விஷத்தால் பாதிக்கப்படாமல் தாக்கு பிடிக்கும் ஒரே ஒரு சிந்தனை முறை இஸ்லாம் மட்டுமே.
காரணம் அது கடுமையான சட்ட திட்டங்கள் கொண்ட மார்க்கம். அப்படியும் சிலர் இந்திய தன்மையால் பாதிக்கப்படத்தான் செய்தனர். ஆனால் அவர்கள் அதன் பின் இஸ்லாமியராக தொடர முடியாது. அஹமதியா முஸ்லிம் என்பது போல புதிய பிரிவினராக மாறிக்கொள்ளலாம். அசல் இஸ்லாம் அப்படியே இருக்கும்.
எனவெதான் , இந்தியாவில் என்றாவது மாற்றம் என ஏற்பட்டால் அது இஸ்லாமால் மட்டுமே முடியும் என குறிப்பிட்டேன். வேறு எந்த இயக்கமோ , கட்சியோ , சிந்தனை முறையோ இங்கு எதுவும் செய்ய முடியாது என்பது மறுக்க முடியாத யதார்த்தம்.
பாலியல் குற்றங்களை பொறுத்தவரை , நமக்கெல்லாம் அது வெறும் செய்தியாகத்தான் மனதில் பதிகிறது. எனவேதான் மனித உரிமை ,ஆணாதிக்கம் என்றெல்லாம் பேசுகிறோம்.
ஆனால் , காலப்போக்கில் இந்த வக்கிரங்களின் கொடுமையை ஒவ்வொரு இந்தியனும் நேரடியாக உணரப்போவது உறுதி. நேரடியாக இல்லாவிட்டாலும் , தெரிந்தவர் , தெரிந்தவருக்கு தெரிந்தவர் என்ற அடிப்படையிலாவது பாதிப்பை உணர முடியும்.
அப்போது தான் இஸ்லாமிய வழிமுறைகளை , பிற்போக்கு என்று கிண்டல் அடிக்கும் மனோபாவம் மறைந்து , அதுதான் முற்போக்கான சிந்தனை , ஆணாதிக்க எதிர்ப்பு சிந்தனை என்பது புரியும்.
இந்த பிரச்சினையை முகமது நபி எப்படி கையாண்டார் என பாருங்கள். அதில் இருப்பது பெண்ணடிமைத்தனமா , பெண்கள் மேல் பரிவா என தெரியும்.
நபி (ஸல்) தண்டனை காலத்தில் ஒரு முறை பெண் ஒருத்தி ஒருவனால் பலவந்தமாக கற்பழிக்கப் படுகிறாள். பிறகு அவள் தன்னை கற்பழித்தவனை மக்கள் முன் அடையாளம் கூறியவுடன் மக்கள் அவனை கைது அந்த பெண்ணையும் நபி (ஸல்) அவர்களிடம் கூட்டிக் கொண்டு போகிறார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அந்த பெண்ணை நோக்கி “இங்கிருந்து செல், அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்” என்று கூறிய பின்பு கற்பழித்தவனை நோக்கி “இவனை கல்லெறிந்து கொல்லுங்கள்” என்று கூறினார்.
முன்பு நாயை வைத்து ஓர் ஆராய்ச்சி செய்யப்பட்டது . சாப்பாட்டு வேளையில் ஒரு மணி ஒலிக்கப்படும் , மணி சத்தத்தை தொடர்ந்து நாய்க்கு உணவு அளிப்பார்கள், ஒவ்வொரு முறை மணி ஒலித்தபின்பும் நாய்க்கு சாப்பாடு கிடைக்கும் . சில தினங்களில் மணி சத்தம் கேட்ட உடனேயே நாய்க்கு உமிழ் நீர் சுரக்க ஆரம்பித்தது , அதன் ஆழ் நினைவில் மணி சத்ததுடன் உணவு இணைந்து விட்டது.
அதே போல் சமூகத்தின் மனதில் , கற்பழிப்புடன் கல்லெறி இணைந்து விட்டால் என்ன ஆகும் , தவறாக கை வைக்கும் முன்பு கல்லெறி நினைவுக்கு வருமா இல்லையா..
இதெல்லாம் காட்டுமிராண்டி முறை என சிலர் சொல்லக்கூடும் , இப்போது மட்டும் , நாம் மனிதர்களாகவா வாழ்ந்து வருகிறோம்.??
http://www.pichaikaaran.com/2012/12/blog-post_25.html
(தேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு)